Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th June 2023 21:08:04 Hours

இலங்கை பாதுகாப்பு படைக்குழு ஐநா இடைக்கால படை - லெபனான் நீச்சல் போட்டியில் சம்பியன்

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் இலங்கைப் பாதுகாப்பு படைக்குழு வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்பட்டும் ‘திறந்த நீச்சல் போட்டி’ 2023 ஆனது மே 25-26 திகதிகளில் லெபனான் நகோராவில் உள்ள ஐ.நா இடைக்காலப் படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, ஐரிஷ்-போலந்து படையலகு, பிரான்ஸ், ஸ்பெயின், சீனா, கனா, மலேசியா, மெக்சிடோனியா, ஸ்லோவேனியா, இத்தாலி, பாதுகாப்புப் படை தலைமையகப் பிரிவு மற்றும் மேற்கு செக்டார் என ஏராளமான நீச்சல் வீரர்கள் இரண்டு நாட்கள் இடம் பெற்ற போட்டியில் போட்டியிட்டனர்.

ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் பிரதி தளபதி, பிரிகேடியர் ஜெனரல் சோக் பகதூர் தாகல் அவர்கள் இலங்கைப் பாதுகாப்பு படைக்குழு ஒருங்கினைப்பு தளபதி லெப்டினன்ட் கேணல் டிபீஎல்டி களுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுடன் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை பிரான்ஸ் (போர்ஸ் கமாண்டர் ரிசர்வ் குழு) கைப்பற்றினர், ஸ்பெயின் மற்றும் இலங்கை குழுவினர் இரண்டாம் இடத்தை பெற்றனர்.

இலங்கை பாதுகாப்பு படை நிறுவனத்தின் சாதனைகள் பின்வருமாறு:

40 மீ ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் (பெண்கள்) - முதலாம் இடம் -

சார்ஜன்ட் கேஈஎன் விமலசூரிய

40 மீ ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் (பெண்கள்) - 3வது இடம் –

பணி நிலை சார்ஜன்ட் பீடிசி கயந்தி

4 X 40 மீ மெட்லி அஞ்சல் - 3வது இடம் - இலங்கை பாதுகாப்பு படைக்குழு

சார்ஜன்ட் டிஎஸ் ஜெயசேகர
கோப்ரல் கேஜி நுவன்சஞ்சீவ
கோப்ரல் ஆர்ஜிஎன்எஸ் பிரசன்ன குமார
கோப்ரல் யூஜிகேஆர் பிரேமசிறி