Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th May 2023 09:31:16 Hours

இலங்கை சிங்க படையணியில் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு மரியாதை

அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் 33 வருடங்களுக்கும் மேலான பெறுமதிமிக்க சேவையை நிறைவுசெய்து ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியான பிரிகேடியர் எல்கேஐஜி லொகுகெடகொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கு 2023 மே 25 ம் பிரியாவிடை மரியாதை வழங்கப்பட்டது.

இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய அவருக்கு இலங்கை சிங்கப் படையணி படையினரால் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தின் போர் வீரர்களின் நினைவுச் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்துவதற்கு முன்பு அவருக்கு சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது, மேலும் வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவாக அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பின்னர், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி குழு படத்தில் இணைவதற்கு முன், பிரதான கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அனைத்து நிலையினருடன் மதிய உணவு விருந்துபசாரத்தை தொடர்ந்து, நினைவுச்சின்னங்களும் பரிமாற்றப்பட்டன.

இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் சார்பாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்களினால் அர்ப்பணிப்பு சேவைகளுக்கு அடையாளப் பாராட்டு சின்னம் வழங்கப்பட்டது.

அதே சந்தர்ப்பத்தில், இலங்கை சிங்கப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் துணைத் தலைவி திருமதி சியாமலி விஜேசேகர, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் துணைவியார் திருமதி சஜீவ லியனகே அவர்களுக்கு சிறப்பு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

பிரிகேடியர் எல்கேஐஜி லொகுகெடகொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் அனைத்து அதிகாரிகளிடமும் கலந்துரையாடியதுடன் சிங்கப் படையணியின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக தனது கடமைகளை நிறைவேற்ற அனைவரும் வழங்கிய உதவிக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.

இலங்கை சிங்க படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பேரவை உறுப்பினர்கள், பதவி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களது துனைவியர் என பலர் கலந்து கொண்டனர்.