Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th August 2023 18:09:04 Hours

இலங்கை சிங்கப் படையணி தலைமையகம் சிறந்த பாடநெறி பங்கேற்பாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிமுகம்

அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணி தலைமையகம், பொதுப் பாடநெறிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஊக்கமளிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைப் பின்பற்றும் அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் இலங்கை சிங்கப் படையணியின் பாடநெறியில் பங்கேற்பவர்களுக்கு ஊக்கத்தொகை சலுகைகளை வழங்கத் தொடங்கியுள்ளனர். உபகரண பணிப்பாளர் நாயகமும், இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜெயவர்தன ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களின் தலைமையில் இதன் முதல் விருது வழங்கும் நிகழ்வு இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.

அதன்படி, சமீபத்திய அதிகாரவாணையற்ற அதிகாரி தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை பாடநெறி', 'அணிநடை பயிற்றுவிப்பாளர் பாடநெறி', 'பயிற்சி முறை', தலைமைத்துவம் மற்றும் தொழில் மேம்பாட்டுப் பாடநெறி' மற்றும் 'உடல் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி' ஆகிய மூன்று பாடநெறிகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய ஏழு பாடநெறி பங்கேற்பாளர்களுக்கு இராணுவத் தலைமையகத்தின் உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜெயவர்தன ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களானல் செய்யப்பட்ட முன்மொழிவின் பேரில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

இலங்கை சிங்கப் படையணி தலைமையகம் ஒவ்வொரு பாடநெறி பங்கேற்பாளரும் பாடநெறிக்கான பொருட்களின் கொள்வனவுச் செலவைக் கருத்தில் கொண்டு, இலங்கை சிங்கப் படையணி படையினர் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பாடநெறியில் சிறந்தவர்களுக்கு ஊக்கத்தொகை சலுகைகளை வழங்குவதன் மூலம் அவர்களைத் தூண்ட முடிவு செய்துள்ளது.

அதிகாரவாணையற்ற அதிகாரி II எஸ்பிஎடிஆர் பண்டார ஆர்எஸ்பீ யூஎஸ்பீ (4வது இசிப), சார்ஜென் எஸ்எம் ஹெட்டியாராச்சி (8 வது இசிப), கோப்ரல் டிஎம் சுனில் சாந்த (7 வது இசிப), லான்ஸ் கோப்ரல் எம்எச்டிஎம் உதயங்க (7 வது இசிப), லான்ஸ் கோப்ரல் எம்.எச்.டி.எம். உதயங்க (20 வது இசிப) சிப்பாய் பீவிஜி வசந்த குமார (1 வது இசிப), சிப்பாய் எச்எம்எம்எல்கே சேனாரத்ன (8 வது இசிப) சிப்பாய் டபிள்யுஎம்சிசி தயாரத்ன (11 வது (தொ) இசிப) ஆகியோருக்கு இந்த ஊக்கத்தொகைகள் படைத் தளபதியினால் வழங்கப்பட்டன.

இலங்கை சிங்கப் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் சிஎஸ் திப்பொட்டுகே, அதிகாரிகள் மற்றும் பாடநெறியில் கலந்துகொண்டவர்கள் பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.