Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th November 2023 09:32:46 Hours

இலங்கை சமாதான ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி நிறுவனத்தில் ஐநா இராணுவ கண்காணிப்பாளர் பாடநெறி நிறைவு

ஐநா இராணுவ கண்காணிப்பாளர் பாடநெறி (ஜீபீஓஐ) எண்: 02- 2023 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு குகுலேகங்க இலங்கை சமாதான ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி நிறுவன தளபதி பிரிகேடியர் சிஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் தலைமையில் நவம்பர் 24 அன்று இடம்பெற்றது.

ஐநா இராணுவ கண்காணிப்பாளர் பாடநெறி எண் 2, 2023 நவம்பர் 06 தொடங்கி 2023 நவம்பர் 24 நிறைவடைந்தது. இந்த விரிவான பயிற்சி ஐநா சபை மற்றும் உலகளாவிய அமைதி காக்கும் நடவடிக்கை முயற்சிகள் (ஜீபீஓஐ) அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் உள்ளிட்ட 30 மாணவ அதிகாரிகள் இந்த பாடநெறியை பின்பற்றினர்.

இலங்கை சமாதான ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி நிறுவனத்தில் முக்கியமாக ஐநா இராணுவ கண்காணிப்பாளர் செய்ய வேண்டிய முக்கிய பொறுப்புகளில் கவனம் செலுத்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கை துறை வழங்கிய வழிகாட்டுதல்களின்படி இப் பாடத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப் பாடநெறி நிறைவில் பங்கேற்பாளர்கள் திறமையான ஐக்கிய நாடுகளின் இராணுவக் கண்காணிப்பாளர்களின் அறிவு, திறன்கள் மற்றும் பண்புக்கூறுகளில் திறமையானவர்களாக காணப்படுவர். விரிவுரைக் குழுவில் ஜீபீஓஐ அமைப்பின் 02 வெளிநாட்டு அதிகாரி பயிற்றுனர்கள், நேபாள இராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன் கேணல் ராஜு மஹர்ஜன் மற்றும் மேஜர் துர்பாகார்க்கி மற்றும் உள்நாட்டு பயிற்றுவிப்பாளர், லெப்டினன் கேணல் பீடபிள்யூ கருணாரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோர் பாடநெறி மாணவர்களுக்கு பயிற்சியழித்தனர்.

விருது வழங்கும் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.