Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th June 2023 17:33:25 Hours

இலங்கை கவச வாகனப் பிரிகேட்டிற்கு 35 வது ஆண்டு நிறைவு

இலங்கை கவச வாகன பிரிகேட் தனது 35 வது ஆண்டு விழாவை 01 ஜூன் 2023 அன்று ரோக் ஹவுஸ் முகாம் வளாகத்தில் கொண்டாடியது. கவச வாகன பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூபீ காரியவசம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆண்டு நிறைவு தின நிகழ்வுகளை சிறப்பித்தார்.

இராணுவ மரபுகளுக்கு இணங்க, கவச வாகன பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூபீ காரியவசம் முகாம் வளாகத்திற்கு வந்தடைந்தபோது, அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை விங்கப்பட்டது.

அதன் பின்னர், கவச வாகன பிரிகேட் தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன், கவச வாகன படையணிக்கு புதியதாக கிடைக்கப்பெற்ற கண்ணிவெடி எதிர்ப்பு வாகனத்தை 1 வது இலங்கை கவச வாகன படையணிக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தார், அன்றய நிகழ்வு அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துடன் நிறைவுபெற்றது.