Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd December 2023 05:23:39 Hours

இலங்கை கவசப் வாகன படையணியின் 68வது ஆண்டு நிறைவு

இலங்கை கவச வாகனப் படையணியின் 68வது ஆண்டு நிறைவு நிகழ்வு 15 2023 டிசம்பர் மோதரை ரொக் ஹவுஸ் தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதியும் இராணுவ செயலாளருமான மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுஎம் பெர்னாண்டோ டப்ளியுடப்ளயுவீ ஆர்டப்ளியுவீ ஆர்எஸ்பீ வீஎஸவீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களுடன் சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அன்றைய பிரதம அதிதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசீ, இலங்கை கவச வாகன படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் பீஎன் விஜேசிறிவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் இலங்கை கவச வாகன பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் எல்கேடிடிஐ பெர்னாண்டோ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆகியோர்களால் வரவேற்கப்பட்டார்.

ஆரம்பத்தில், படைப்பிரிவை ஸ்தாபிப்பதில் உறுதுணையாக இருந்த ஜெனரல் தேசமான்ய டிஎஸ் ஆட்டிகல எம்வீஓ ஐடிசீ பீஎஸ்சீ அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய பிரதம அதிதிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர், பிரதம அதிதி ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் அனைத்து நிலையினருக்கும் சிவில் ஊழியர்களுக்கும் தனது அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அத்துடன் காயமடைந்த இலங்கை கவச வாகனப் படையணியின் போர்வீரர்கள் விரைவில் குணமடைய தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

அணிவகுப்பின் பின்னர் வருடத்தில் நிகழ்த்தப்பட்ட செயல்பாடுகளின் அடிப்படையில், சிறந்த இலங்கை கவச வாகனப் படையணியின் கிண்ணங்கள் வழங்கப்பட்டன. 4 வது இலங்கை கவச வாகன படையணி 2023 ஆம் ஆண்டிற்கான மிகச் சிறந்த படையலகாக தெரிவு செய்யப்பட்டு கிண்ணத்தை பெற்றதுடன், 5வது உளவுப் படைப்பிரிவு மற்றும் 1 உளவுப் படையணிகளுக்கு முறையே 2 ம் மற்றும் 3ம் இடங்களுக்கான கின்னங்கள் வழங்கப்பட்டன.

ஒரு சிறப்பு நிகழ்வாக, 2023 ஆம் ஆண்டில் உள்நாட்டு, வெளிநாட்டு பாடநெறிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு 68 வது ஆண்டு நிறைவு நிகழ்வின் வரலாற்றில் முதன்முறையாக படைத் தளபதி விருதுகளை வழங்கினார். ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் எம்பீ பீரிஸ் (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் அதன் உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கை கவச வாகன படையணி குடும்பங்களின் சிறார்களுக்கு 6 புலமைப்பரிசில்களை வழங்கினார்.

இதேவேளை, பங்குபற்றிய சிரேஷ்ட அதிகாரிகள் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களை வழங்கினர்.

'ஆர்மர் கோப் ஜேனட 2023' எனும் சஞ்சிகையும் நிகழ்வில் வெளியிடப்பட்டது.

அனைத்து நிலையினருக்கான மதிய உணவுடன் நிகழ்வு நிறைவடைந்தது. ஜெனரல் ஜே ஜயசூரிய (ஓய்வு) ஆர்டபிள்யூபீ விஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி, திருமதி லாலி கொப்பேகடுவ, கவச வாகனப் டையணி குடும்பத்தைச் சேர்ந்த பல புகழ்பெற்ற ஓய்வுபெற்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள்/அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.