Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th November 2022 06:25:39 Hours

இலங்கை ஐ.நா. வீரர்களுக்கு மாலியில் 'சாகச நடவடிக்கைகளுக்காக' 'சிறப்பு' சின்னம் அணிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் மாலி படையில் சேவை செய்யும் இலங்கை படையினர்களுக்கு, அவர்களின் சாகச நடவடிக்கைகளை அங்கீகரிப்பதற்காக அண்மையில் ஐ நா அமைதிகாக்கும் படையணி கிழக்கு துறை தலைமையகத்தினரால் 'சிறப்பு' சின்னம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

கிழக்கு துறை தலைமையகத்தின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ஸ்டீபன் ஆண்டர்சன், அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (1) இலங்கை அமைதி காக்கும் படையணிக்கு விஜயத்தை மேற்கொண்டு அனைத்து அமைதி காக்கும் படையினருக்கும் சவாலான சூழ்நிலையில் அவர்கள் வழங்கிய சிறந்த கடமைகளை பாராட்டி கிழக்கு துறை தலைமையக சின்னத்தை அணிவிதார்.

கடந்த 6 மாதங்களில், மாலியில் உள்ள பயங்கரவாத குழுக்கள் தங்கள் எதிரிகளையும், நிலத்தால் சூழப்பட்ட நாட்டிற்கு சேவை செய்யும் ஐ.நா படையினர்களை குறிவைத்து தங்கள் கடுமையான செயல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இதேபோல், அவர்களின் மிருகத்தனமான மற்றும் கடுமையான பயங்கரவாத தாக்குதல்கள் அனைத்தும் ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள ஐ.நா படையினர்களுக்கு ஒரு பயங்கரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடதக்கதாகும்.