Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd November 2023 21:00:42 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 142 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு போர்வீரர்கள் கெளரவிப்பு

‘நான் சேவை செய்கின்றேன்’ என்ற நோக்க கூற்றுடன் தொழிற்படும் இராணுவத்தின் மிகப் பழமையான படையணியான இலங்கை இலேசாயுத காலாட் படையணி தனது 142 வது ஆண்டு நிறைவை திங்கட்கிழமை 23 ஒக்டோபர் கொண்டாடியது.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எம்.பீ.எஸ்.பீ குலசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள் வீரமரணமடைந்த போர் வீர்ர்களின் உறவினர்கள் சேவையில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்குபற்றலுடன் 142 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு படையினரின் நினைவு கூரும் நிகழ்வு பனாகொடை படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது.

முதலில் ஆண்டு நிறைவு நாளில் (23 ஒக்டோபர்), இலேசாயுத காலாட் படையணியின் தளபதி அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் அவருக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி வரவேற்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அணிவகுப்பு சதுக்கத்தில் வண்ணமயமான அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அனைத்து நிலையினருடன் குழு படம் எடுத்துகொள்ளப்பட்டது. பின்னர், பிரதம அதிதி படையினருக்கு உரையாற்றியதுடன் படையலகுகளுக்கிடையேயான அணி நடை போட்டி,வருடாந்த நிர்வாக ஆய்வு, ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு கிண்ணங்கள் வழங்கினார். பின்னர், அனைத்து நிலையினருடன் மதிய உணவு விருந்தில் கலந்துகொண்டார். செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 28) இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, 1881 ஆம் ஆண்டு இலேசாயுத காலாட் படையணி ஆரம்பிக்கப்பட்ட முதல் நாட்டின் பாதுகாப்பிற்காக போரிட்டு உயிரிழந்த 3744 இலேசாயுத காலாட் படையணியின் ‘அபிமன் முத்துநாத’ போர் வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி, முன்னாள் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் டி.ஜே கொடித்துவக்கு (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இலேசாயுத காலாட் படையணியின் ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கான மலர் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அன்றைய தினம் மாலை, இரவு முழுவதும் பிரித் பாராயணம் நிகழ்வு இடம்பெற்றதுடன், மறுநாள் காலை தானத்துடன் தொடர் நிகழ்வுகள் நிறைவடைந்தன.