Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2022 22:17:12 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் புதிய படைத் தளபதி கடமைகள் பொறுப்பேற்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 15 வது படைத் தளபதியாக மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் டிசம்பர் (03) சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இலேசாயுத காலாட் படையணியின் நிலையத் தளபதி கேணல் சுஜித் குலசேகர மற்றும் இலேசாயுத காலாட் படையணியின் பிரதி நிலையத் தளபதி கேணல் ருவன் சிறிவர்தன ஆகியோரால் வரவேற்கப்பட்டதுடன் தளபதிக்கு வர்ணமயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. இலேசாயுத காலாட் படையணியின் புதிய சின்னமான 'கண்டுல' யானையும் இலேசாயுத காலாட் படையணியின் புதிய படைத் தளபதியை கௌரவித்தது.

பின்னர், படையணியின் புதிய தளபதி வளாகத்தில் உள்ள அதிநவீன இலேசாயுத காலாட் படையணியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களை நினைவுகூர்ந்து மலர் அஞ்சலி செலுத்தினார். வருகையின் நினைவம்சமாக படையணி தலைமையக வளாகத்தில் மரக்கன்று நடுவதற்கும் அழைக்கப்பட்டார் பின்னர், மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் புதிய அலுவலகத்தினை பொறுப்பேற்று கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கு முன்னர், பாரம்பரிய விளக்கை ஏற்றி வைத்ததன் பின்னர், படையணியின் தளபதியாக தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக் கொண்டார்.

அன்றைய நிகழ்ச்சியின் முடிவில், அவர் படையினர்களிடம் உரையாற்றுவதற்கு முன் குழு படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற வழக்கமான மதிய உணவின் போது, அவர் படையினர்களுடன் உரையாடுவதற்கு நேரத்தை எடுத்துக் கொண்டார். அவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களுக்கு பதிலாக இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.