Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th July 2023 23:01:45 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் உயர் தர நிர்வாக மற்றும் நலன்புரி வசதிகளுடனான கட்டிடம் திறப்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகம், தனது நலன்புரி வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் கருத்தின் அடிப்படையில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் படையினர்களுக்கான புதிய தங்குமிட வசதிகளுடனான கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.

சனிக்கிழமை (ஜூலை 08) இடம் பெற்ற நிகழ்வில் புதிதாக மறுசீரமைப்பு செய்த படையணியின் சார்ஜென்ட் மேஜர் அறை, புதிய நிர்வாக வளாகம் மற்றும் படையணி தலைமையகத்தில் தங்குமிடம் வசதி ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.

முதலில், பிரதம அதிதியினால் படையினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட மற்றும் மீள் நிர்மாணம் செய்த தங்குமிட வசதிகளை திறந்துவைக்கப்பட்டது. இந்த இரண்டு மாடி 1950 இல் கட்டப்பட்டது மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியின் பரிந்துரைப்பின் பேரில் இக் கட்டடங்களின் ஒட்டுமொத்த மறுசீரமைப்பும் முன்னெடுக்கப்பட்டது. மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ எஎன்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் இந்த திட்டத்திற்கான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் வழங்கப்பட்டது.

பின்னர், இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் மூன்று மாடி நிர்வாக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. வளாகத்தில் நீண்டகாலமான தேவை பூர்தி செய்யப்பட்டது. இந்த வளாகம் மாநாட்டு மண்டபம் உட்பட அனைத்து புதிய வசதிகளையும் கொண்டுள்ளது. பிரதம அதிதி பதாகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.

சிறிது நேரத்திற்குப் பின்னர். புதிதாக புணரமைக்கப்பட்ட படையணியின் சார்ஜென்ட் மேஜர்களின் அறை சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சார்ஜன்ட் மேஜரான அதிகாரவாணையற்ற அதிகாரி 1 ஜீவீ குமாரவிடம் அடையாளமாக கையளிக்கப்பட்டது. பொறியியல் சேவை படையணி மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர்களின் ஆதரவுடன் இந்த அறை கட்டப்பட்டது.

நிகழ்ச்சி இரண்டாவது பிரிவாக, பதவி நிலை பிரதானி பூஸ்ஸவில் அமைந்துள் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பயிற்சி நிலையத்திற்குச் சென்று புதிதாக புணர் நிர்மாணம் செய்த வரவேற்பு மண்டபத்தை திறந்து வைத்தார்.வரவேற்பு மண்டபம் திருமணங்கள் மற்றும் ஏனைய சமூகக் கூட்டங்களை நடத்துவதற்கு உதவுகிறது. 90 பேருக்கான கொள்ளளவு கொண்ட இந்தத் திட்டம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி எம்பீஎஸ்பீ குலசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரிகளின் கருத்தியல் தி்ட்டங்களில் மேற்கூறப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் தொடங்கப்பட்டன.

யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்பீ , 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பணி நிலை அதிகாரிகள், படையணி கட்டளைத் அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.