Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th July 2023 19:19:03 Hours

இலங்கை இராணுவ வைத்திய படையணியில் மேஜர் ஜெனரல் எஸ்எச் முனசிங்க அவர்களுக்கு பிரியாவிடை

கொழும்பு இராணுவ மருத்துவமனையின் புகழ்பெற்ற கதிரியக்க நிபுணரான மேஜர் ஜெனரல் எஸ்.எச் முனசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், வெரஹெர இலங்கை இராணுவ மருத்துவப் படையணி தலைமையகத்தில் திங்கட்கிழமை (ஜூன் 26) நேர்த்தியான இராணுவ பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் எஸ்எச் முனசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ அவர்கள் வளாகத்திற்கு வந்தடைந்ததும் இலங்கை இராணுவ மருத்துவப் படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஏசி பெர்னாண்டோ யூஎஸ்பீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

அணிவகுப்புத் தளபதியுடன் ஓய்வு பெற்றவர் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்த பின்னர் இலங்கை இராணுவ மருத்துவப் படையணி படையினரால் அவருக்கு இராணுவ மரியாதை வழங்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் வழக்கமான அனைத்து நிலையினருடானான தேநீர் விருந்தில் கலந்துக் கொண்டார். அங்கு அவர் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் கலந்துரையாடினார்.

மேஜர் ஜெனரல் எஸ்எச் முனசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ அவர்களின் வாகனம் தலைமையக வளாகத்தின் ஊடாகச் சென்றபோது, 'ஜெய ஸ்ரீ' என்று வாழ்த்தி, அனைத்து அதிகாரிகளும் சிப்பாய்களும் சேர்ந்து அவரை வரவேற்றனர். மேஜர் ஜெனரல் எஸ்எச் முனசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ அவர்களுக்கான பிரியாவிடை இரவு விருந்தானது, படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஏசி பெர்னாண்டோ யுஎஸ்பீ உட்பட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் அதே மாலை நடைபெற்றது.

இந்த ஏற்பாட்டின் முடிவில், படைத் தளபதியினால், பதவி விலகும் மேஜர் ஜெனரல் எஸ்எச் முனசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ அவர்களுக்கு இலங்கை இராணுவ மருத்துவப் படையணிக்கு அவர் ஆற்றிய அளப்பரிய சேவையை அங்கீகரிப்பதற்கான விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.