Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th October 2023 23:21:01 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் படையினருக்கு 'போக்குவரத்து கட்டுப்பாடு & போக்குவரத்து முகாமைத்துவம்' குறித்து பயிற்சி

இலங்கை பொலிஸ் நகரப் போக்குவரத்துப் பிரிவுடன் இணைந்து ‘போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து முகாமைத்துவம்’ தொடர்பான மூன்று நாள் பயிற்சிப் பட்டறையை 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை பொல்ஹெங்கொட இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பகம் நடத்தியது. இந்தச் செயலமர்வின் முக்கிய நோக்கமானது, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் பாடப் பகுதி பற்றிய அறிவை விரிவுபடுத்துவதாகும்.

இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்களின் ஆரம்ப உரையுடன் செயலமர்வு ஆரம்பிக்கப்பட்டதுடன் அங்கு அவர் இந்த துறையில் உள்ள அறிவின் மதிப்பையும் பாதுகாப்பு துறையின் கடமைகளை உயர் தரத்துடன் நிறைவேற்ற வலியுறுத்தினார்.

நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் 06 அதிகாரிகளும், 59 அதிகாரவாணையற்ற அதிகாரிகளும் அமர்வுகளில் பங்குபற்றினர். பட்டறை உள்ளடக்கத்தில் மோட்டார் போக்குவரத்து சட்டம் மற்றும் முக்கியமான தொடர்புடைய பிரிவுகள், போக்குவரத்து கட்டுப்பாடு அறிமுகம், பொது வீதிகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம், வீதி அடையாளங்கள் அறிமுகம், போக்குவரத்து வர்ண விளக்குகள் மற்றும் போக்குவரத்து விதிகள், இராணுவ ஓட்டுநர்கள் மற்றும் ரைடர்களினால் செய்யப்படும் குற்றங்கள் சிவில் பொலிஸ் மற்றும் சிவில் அதிகாரிகளுடன் தொடர்பு மற்றும் வாகனங்களின் வேக சோதனை தொடர்பான தொகுதிகள் அடங்கும்.

இந்த செயலமர்வில் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி நிலைய தளபதி, விசேட புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி தலைமையக ஒழுக்க பாதுகாப்பு பணிப்பகத்தின் கேணல் ஒழுக்க பாதுகாப்பு ஆகியோரும் கலந்துகொண்டனர்.