Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th March 2023 21:20:27 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகம் ஓய்வுபெறும் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளரின் சேவைக்கு பராட்டு

பொல்ஹெங்கொட இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி தலைமையகத்தில் வியாழன் (மார்ச் 02) அன்று இடம்பெற்ற உத்தியோகபூர்வ பிரியாவிடை நிகழ்வின் போது ஓய்வுபெறும் பிரிகேடியர் லக்ஷ்மன் பமுனுசிங்க அவர்களுக்கு இராணுவ மரபுகளுக்கு அமைவாக மரியாதை செலுத்தப்பட்டது.

அன்றை தினம் அவருக்காக இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி தலைமையக அணிவகுப்பு மைதானத்தில் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்படுவதற்கு முன்னதாக நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்ககையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

தொடர்ந்து படையினரிடம் ஆற்றிய உரையின் போது அவரது பதவிக் காலத்தில் அவர்கள் வழங்கிய ஆதரவிற்காக இராணுவத் தளபதி, அனைத்து முதன்மைப் பணிநிலை அதிகாரிகள், படைத் தளபதிகள், பொலிஸ் படையணியின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் நிறுவனத்தின் நற்பெயரைப் பாதுகாக்கும் அதே வேளையில் புதிய ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளருக்கு அதே முறையில் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

பின்னர் மாலையில் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு, அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவியார்களுடன் பிரியாவிடை இரவு விருந்துபசாரம் வழங்கப்பட்டது. பிரிகேடியர் லக்ஷ்மன் பமுனுசிங்க சிரேஷ்ட அதிகாரியின் சில முக்கிய சாதனைகள், மைல்கற்கள் மற்றும் நினைவுகளை நினைவு கூர்ந்த போது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன், பிரிகேடியர் லக்ஷ்மன் பமுனுசிங்கவின் சேவைக்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்து பிரியாவிடையை வழங்கினார்.

முல்லைத்தீவு முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதியும், இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி தளபதியுமான மேஜர் ஜெனரல் அனில் இலங்ககோன், வடக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதி மேஜர் ஜெனரல் கிளிபோர்ட் டி சொய்சா, இராணுவப் பொலிஸ் படையணி பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உத்தியோகபூர்வ விழாவில் பங்குபற்றினர்.

பிரிகேடியர் லக்ஷ்மன் பமுனுசிங்க அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் இராணுவ ஒழுக்க பாதுகாப்பு பணிப்பகத்தின் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளராக கடமையாற்றினார்.