Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th June 2023 17:41:07 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையலகு முன்வைப்பு

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் அதிகாரிகளின் தொடர்பாடல் திறன்களை மேம்படுத்துவதற்காக, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎஎஸ்எஸ் வணசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், கட்டளையின் கீழ் உள்ள அனைவருக்கும் ‘படையலகு முன்வைப்பு நிகழ்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியின் தலைமையில், 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் அதிகாரிகளுடன் இணைந்து 'வெப்பமடைதல் மற்றும் தீர்வுகள்' என்ற தலைப்பிலான முன்வைப்பு மே 31 அன்று கொஸ்கமவில் உள்ள இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தலைமையகத்தில் இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎஎஸ்எஸ் வணசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ மற்றும் இராணுவ தொண்டர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

முன்வைப்பானது கேள்வி பதில் அமர்வுடன் முடிவடைந்தது, அங்கு பார்வையாளர்கள் குழுவில் உள்ள தொகுப்பாளர்களிடமிருந்து தங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த முடிந்தது.

முன்வைப்பின் முடிவில், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி அவர்கள் முன்வைப்புக்கு எடுத்த முயற்சிகளைப் பாராட்டினார்.