Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th November 2023 21:48:25 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் இரண்டாம் கட்டம் தொண்டர் படையலகு விளக்ககாட்சி

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் கருத்திற்கொள்ளப்பட்ட வெவ்வேறு காலப் பாடங்கள் பற்றிய விளக்கக்காட்சிகளுக்கான திட்டத்தின் இரண்டாம் கட்டம் 15 நவம்பர் 2023 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் உள்ள பல்செயல்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி மற்றும் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ ஆகியோரின் ஆகியோரின் பிரசன்னம் கல்வி அமர்வுக்கு மேலும் முக்கியத்துவத்தைச் சேர்த்தது.

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 19 வது (தொ) இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள சக்தி நெருக்கடிக்கான தீர்வாக சூரிய சக்தியை அபிவிருத்தி செய்தல்’ என்ற தொனிப்பொருளில் தமது படையலகு விளக்கக்காட்சியை நடத்தினர்.

இலங்கை இராணுவ தொண்டர் படையணி கேணல் பயிற்சி கேணல் டீஏபிஆர் பெர்னாண்டோ அவர்கள் அன்றைய நிகழ்ச்சி நிரலை ஆரம்பித்து வைத்து விருந்தினர்களை வரவேற்றார்.

தொடர்ந்து 19 வது (தொ) இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் பீ.எஸ்.ஆர் பெரேரா,மேஜர் ஆர்.எச்.ஜயசிங்க, மேஜர் எச்.ஏ.கே.பீ பலிபன பீஎஸ்சீ, கெப்டன் டி.ஜி.கே.எஸ் தெனியகெதர மற்றும் 19 வது (தொ) இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கெப்டன் எம்பீபீயு முத்துநாயக்க ஆகியோர் விளக்கங்களை வழங்கினர்.

விளக்கக்காட்சி ஒரு கேள்வி மற்றும் பதில் அமர்வுடன் முடிந்தது. விளக்கக்காட்சியின் முடிவில், இராணுவத்தின் விளக்கக்காட்சி திறன், நம்பிக்கை மற்றும் தொழில்முறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட அவர்களின் முயற்சிகளை இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி பாராட்டினார். இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் தற்போது பணியாற்றும் மொத்தம் அறுபத்தேழு அதிகாரிகள் விளக்கக்காட்சியை நேரடியாக பார்வையிட்டதுடன் ஏனைய தொண்டர் படையணி படையலகுகளில் பணியாற்றும் அதிகாரிகள் சூம் தொழில்நுட்பம் மூலம் தலைப்பில் அறிவூட்டப்பட்டனர்.