Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th April 2018 18:04:51 Hours

இலங்கை இராணுவ தளபதி மலேசியா இராணுவ பிரதாணிகளை சந்தித்து கலந்துரையாடல்

மலேசியா கோலலம்பூரில் நடைப் பெற்ற 16 ஆவது பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்ச்சி 2018 க்கான தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் மலேசியா இராணுவ பிரதாணி ஜெனரல் டாட்டோ ஸ்ரீ சுல்கிபல் பின் ஹஜ் கசிம் அவர்களை மலேசியா கோலலம்பூரில் சந்தித்தார்.

இச் சந்திப்பில் இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக மற்றும் மலேசியா இராணுவ பிரதாணி ஜெனரல் டாட்டோ ஸ்ரீ சுல்கிபல் பின் ஹஜ் கசிம் இருவரும் கலகலப்பாக கலந்துரையாடும் போது 2018' க்காக இராணுவத்தின் வருடாந்த பிரதான நிகழ்வான 'கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்குக்கு பங்கேற்க அழைத்ததுடன் இலங்கை பயங்கரவாதத்தின் மீதான தாக்குதல்களுக்கு மலேசியா இராணுவம் முழு ஒத்துழைப்பு வழங்கியது பற்றி கலந்துரையாடப்பட்டனர். இது தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மலேசியா இராணுவம் ஏற்படுத்தி கொடுத்தது.

இச் சந்திப்பில் இருவருக்குமிடையேயான கலந்துரையாடலில் இலங்கை இராணுவத் பயிற்சி திட்டங்களின் முக்கியத்துவத்தையும் இலங்கை இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார். சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை இராணுவத்தின் 'கொம்மரன்ட் ஸ்ட்ரைக்' (கூட்டுப்படைப் பயற்சி ) போன்ற இராணுவ பயிற்சிகளை மேற்கோளிட்டு இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் எதிர்காலத்தில் இந்தத் படையினர்களை அனுப்புவதற்காக மலேசியப் பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டார். இரு தளபதிகளுக்கிடையில் நீண்டகாலமாக படைகளுக்குப் பயன் தரும் மற்ற பயிற்சி அம்சங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டனர்.

இரு பிரதாணிகளுக்கும் இடையில் இச் சந்திப்பை நினைவு கூரும் வகையில நினைவு சின்னங்கள் பரிமாரப்பட்டன.

Running sneakers | Nike Off-White