Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th April 2023 20:20:57 Hours

இலங்கை இராணுவ சிங்க படையணியின் படையினரால் ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு மரியாதை

34 வருடங்களுக்கும் மேலான பெறுமதிமிக்க சேவையை நிறைவுசெய்து ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் கனிஷ்க ஹெய்யன்துடுவ அவர்களுக்கு அம்பேபுஸ்ஸவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சிங்கப் படையணி தலைமையகத்தில் திங்கட்கிழமை ஏப்ரல் 03 முறையான பிரியாவிடை மரியாதை வழங்கப்பட்டது.

இலங்கை இராணுவ சிங்கப் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைகளுக்கமைய, அவருக்கு நுழைவாயில், இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் பிரதி நிலைய தளபதி கேணல் வஜிர அமரசிறி அவர்களால் வரவேற்கப்படுவதற்கு முன்னர், இலங்கை இராணுவ சிங்கப் படையணி நிலையத்தின் நிலைய தளபதி பிரிகேடியர் சமிந்ததிப்பட்டுகே அவர்களால் சம்பிரதாயமாக பிரதம அதிதியை நுழைவாயிலில் வரவேற்கப்பட்டார். ஓய்வுபெறும் அதிகாரியின் துணைவியான திருமதி சேனானி ஓபாத அவர்களை திருமதி ஆஷிகா திப்பட்டுகே அவர்களால் வரவேற்கப்பட்டார்.

பின்னர், இலங்கை இராணுவ சிங்கப் படையணி போர் வீரர்களின் நினைவுதூபிக்கு மலர் அஞ்சலி செலுத்துவதற்கு முன், படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதுடன் அன்றைய நிகழ்வின் ஒரு பகுதியாக வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி, அனைத்து நிலையினர்களுடன் அதிகாரிகளும் சேர்ந்து, தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துக்கு முன் குழு படத்தில் இணைந்து கொண்டார்.

அச் சந்தர்ப்பத்தில், ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் கனிஷ்க ஹெய்யன்துடுவ அவர்கள் இலங்கை இராணுவ சிங்கப் படையணியில் ஆற்றிய சேவை மற்றும் அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் வகையில் இலங்கை இராணுவ சிங்கப் படையணியில் உபகரண பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களால் விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

அதற்கமைய, இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் சேவை வனிதையர் கிளையின் தலைவி திருமதி ஒமிலா ஜயவர்தனவினால் திருமதி செனனி ஓபாதவிற்கு விசேட நினைவுச் சின்னம் மற்றும் இலங்கை சிங்கப் படையணியின் இளம் சிறார்களின் கழக உறுப்பினர்கள் பதவி விலகும் மேஜர் ஜெனரலின் மகன் மற்றும் மகளுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தனர்.

மேஜர் ஜெனரல் கனிஷ்க ஹெய்யன்துடுவ, கூடியிருந்த அனைத்து அதிகாரிகளிடமும் கலந்துரையாடியதுடன், சிங்க படையணி குடும்ப உறுப்பினர் என்ற வகையில் தனது கடமைகளை நிறைவேற்ற அனைவரும் வழங்கிய உதவி மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

பேரவை உறுப்பினர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள், வெளியேறும் சிரேஷ்ட அதிகாரியின் பாடநெறி உறுப்பினர்கள், பதவி நிலை அதிகாரிகள், இலங்கை சிங்கப் படையணியின் அதிகாரிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் சிப்பாய்களும் இந் நிகழ்வில் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.