Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th September 2023 08:01:16 Hours

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிலிளவல் அதிகாரிகள் முல்லைத்தீவுக்கு விஜயம்

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பாடநெறி 92 மற்றும் 92 பி பயிலிளவல் அதிகாரிகள் புதன்கிழமை (செப்டம்பர் 20) முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர். இவ் விஜயமானது அவர்களின் பயிற்சி பாடத்திட்டம் மற்றும் பழக்கப்படுத்துதல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ சார்பாக, வருகை தந்த பயிலிளவல் அதிகாரிகளை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் எஸ்டிபீசி ஆராச்சிகே அவர்கள் வரவேற்றார்.

வருகை தந்த தூதுக்குழுவில் 66 பயிலிளவல் அதிகாரிகள் மற்றும் 4 பாடநெறி அதிகாரிகள் உள்ளடங்கியிருந்தனர். முல்லைத்தீவு பிரதேசம் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அபிவிருத்தி, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் பங்கு மற்றும் பொறுப்பு மற்றும் சிவில் சமூக செயற்திட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கமளிப்பு முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேணல் பொது பணி கேணல் எம்.டி.எஸ்.என் கருணாரத்ன பீஎஸ்சீ அவர்களால் வழங்கப்பட்டது.

விஜயத்தின் போது, நீர்மூழ்கிக் கப்பல் பகுதி மற்றும் வெற்றி நினைவுச்சின்னத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து, அவர்கள் 68 வது காலாட் படைப்பிரிவுக்கு வருகை தந்ததுடன், அவர்களை 68 காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் வரவேற்றார். அமர்வின் முடிவில், பயிலிளவல் அதிகாரிகள் 68 வது காலாட் படைப் பிரிவின் தளபதிக்கு பாராட்டுச் சின்னமாக நினைவுப் பரிசு வழங்கினர்.