Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th July 2023 13:07:17 Hours

இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்களுக்கு புதிய வீடுகள்

இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் தனது நலன்புரி சேவையை மேலும் விரிவுபடுத்தும் நிமித்தம், இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும் பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின்' வீட்டுத் திட்டத்திற்கு இணங்க இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் படையினரின் நலனுக்காக தற்போது எம்பிலிப்பிட்டிய மற்றும் குருவிட்ட ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட மேலும் இரண்டு புதிய வீடுகள் திங்கட்கிழமை (3 ஜூலை 2023) திறந்து வைக்கப்பட்டன.

இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் 'வீடமைப்புத் திட்டத்தின்' கட்டம்-3 திங்கட்கிழமை (3) தனித்தனியாக இடம் பெற்ற நிகழ்வுகளில் 7 வது இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி மற்றும் 16 (தொ) இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் வீடற்ற இரு சிப்பாய்களுக்கு இரண்டு புதிய வீடுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இத் திட்டத்தின் காரணகர்த்தாவான மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த திட்டத்தின் கீழ், 7 வது இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி தமது மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வழங்கி எம்பிலிப்பிட்டிய, கட்டுவனவில் வசிக்கும் 7 வது இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும் வீடற்ற சிப்பாய்க்கு புதிய வீட்டை நிர்மாணித்தது. அதேபோன்று, 16 (தொ) வது இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி தமது படைத் தளபதியின் பணிப்புரைக்கமைய குருவிட்ட, நில்லப்பிட்டியில் ஒரு மகனுடன் மிகவும் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட சிப்பாய்க்கு மற்றுமொரு புதிய வீட்டை நிர்மாணித்தனர். அந்த நிர்மாணங்களுக்கான நிதியானது இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி தலைமையகம் மற்றும் அந்தந்த படையலகுகளினால் வழங்கப்பட்டன.

இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில், இவ்விரண்டு வீடுகளின் கட்டுமான பணிகள் அந்தந்த கட்டளை அதிகாரிகளினால் மேற்பார்வையிடப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி படையணியின் படைத் தளபதி பல பரிசுகளுடன் புதிய வீடுகளுக்கான சாவிகளை கையளித்ததுடன் பயனாளிகளுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மத அனுஷ்டானங்களும் இவ் வீட்டின் திறப்பு விழாவில் இடம்பெற்றன.

எம்பிலிப்பிட்டிய மற்றும் குருவிட்ட ஆகிய இடங்களில் தனித்தனியாக வீடுகளை திறக்கும் நிகழ்வுகளில் படையணி இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.