Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th March 2023 18:47:04 Hours

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தனது குடும்பங்களின் பிள்ளைகளுக்கு 10வது நிதி மானிய வழங்கல்

இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் 'விருசவிய' காப்புறுதி திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் குடும்பங்களைச் சேர்ந்த 46 மாணவர்களுக்கு 3 மில்லியன் பெறுமதியான நிதி மானியங்களை வழங்குவதன் 10 வது கட்டம் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (மார்ச் 23) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் கலந்து கொண்டார்.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் குடும்பங்களின் பயனாளிகள், சமீபத்திய உயர் தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு தகுதி பெற்றவர்கள். இலங்கை காப்புறுதி நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘விருசவிய’, காப்புறுதித் திட்டத்தின் கீழ் தலா 75000/= ரூபா பெறுமதியான இந்த காப்புறுதி திட்டமானது, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் துசித சில்வா அவர்களினால் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டு மேற்பார்வையிடப்பட்டது.இராணுவத் தொண்டர் படையணியின் பேரவையினால் இராணுவத் தொண்டர் படையணியின் சிப்பாய்களின் ஆவணங்களை பரிட்சிக்கப்பட்டு தகுதியான பயனாளிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.

பிரதம அதிதியாக இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அலோக ஜெயவர்தன, சிரேஷ்ட முகாமையாளர் திரு.ரவி மெண்டிஸ், சிரேஷ்ட முகாமையாளர் திரு.ரொமேந்திர பெர்னாண்டோ, உதவி முகாமையாளர் மற்றும் பிரதம கணக்காளர் ஆகியோருடன் இணைந்து இந்த உதவித்தொகைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், அழைப்பாளர்கள் மற்றும் பயனாளிகளின் பெற்றோர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரிகேடியர் நிர்வாகம் பிரிகேடியர் எம்டிபிஎம்எஸ் ஜெயமான்ன அவர்கள் வரவேற்புரை ஆற்றியதுடன் விழாவில் பொழுதுபோக்கு அம்சங்களும், கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன.

கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, பயனாளிகளை வாழ்த்திப் பாராட்டியதுடன், கல்விமான்களாக மாறத் தயாராக இருக்கும் பிள்ளைகளின் நலனுக்காக இது தொடர்பாக ஏற்பாடு செய்த அனைத்து அமைப்பாளர்களையும் பாராட்டினார். அனைத்து பயனாளிகள், பெற்றோர்கள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொண்ட தேநீர் விருந்தின் போது இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி அனைவருடனும் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.