Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2023 21:15:20 Hours

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தடகளப் போட்டியில் சாதனைகள்

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தடகளப் போட்டி – 2023 தியகம மகிந்த ராஜபக்ஷ மைதானத்தில் மூன்று நாட்களாக இடம்பெற்று வியாழன் (செப்டம்பர் 21) நிறைவடைந்தது. 24 தடகள நிகழ்வுகளில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டு சாதனை படைத்தனர்.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்ஸ்பீ அவர்கள் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

போட்டியின் போது, புதிய பதினொரு இலங்கை இராணுவத் தொண்டர் படையணி விளையாட்டு வீரர்கள் தடகள சாதனைகளையும் நிலை நாட்டினார். அதற்கமைய இசைக்குழு காட்சிகள் மற்றும் கலாசார நடனக் குழுக்கள் நிறைவு விழாவிற்கு மேலும் கவர்ச்சியையும் வண்ணத்தையும் சேர்த்தன.

இராணுவ வழங்கல் கட்டளையின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பீஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடி பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், தேசிய தடகள சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் திரளான மக்கள் இப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இராணுவத் தொண்டர் படையணி கயிறு இழுத்தல் போட்டியானது, இராணுவத் தொண்டர் படையணி தடகளப் போட்டியுடன் 2023 செப்டம்பர் 6 முதல் 07 வரை பனாகொடவில் உள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக வளாகத்தில் இடம் பெற்றது.

நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் பின்வருமாறு:

இராணுவத் தொண்டர் படையணியின் தடகள ஆண்கள் சம்பியன்கள் - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி
இராணுவத் தொண்டர் படையணியின் தடகள ஆண்கள் இரண்டாம் இடம் - இலங்கை இலேசாயுத காலாட் படையணி
இராணுவத் தொண்டர் படையணியின் தடகள பெண்கள் சம்பியன்கள் - 2 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி
இராணுவத் தொண்டர் படையணியின் தடகள பெண்கள் இரண்டாம் இடம் - 2 வது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி
இராணுவத் தொண்டர் படையணியின் தடகள ஆண்களுக்கான சிறந்த தடகள வீரர் - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாய் ஆர்பீஐ லக்க்ஷான்
இராணுவத் தொண்டர் படையணியின் தடகள பெண்களுக்கான சிறந்த தடகள வீராங்கனை - 2 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சார்ஜன்ட் எச்எல்என்பீ லீகமகே
இராணுவத் தொண்டர் படையணியின் கயிறு இழுத்தல் சம்பியன்கள் - இலங்கை இலேசாயுத காலாட் படையணி
இராணுவத் தொண்டர் படையணியின் கயிறு இழுத்தல் இரண்டாம் இடம் - 2 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி

சந்திப்பின் போது பெறப்பட்ட புதிய இராணுவத் தொண்டர் படையணியின் சாதனைகள் பின்வருமாறு:

10000 மீ பெண்கள் (நேரம் -37.04.36) – இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் சி ஹேரத்
100 மீ பெண்கள் தடை தாண்டல் ஓட்டம் (நேரம் - 13.92) - இலங்கை இராணுவ மகளிர் படையின் சார்ஜன்ட் எல் சுகந்தி
3000 மீ பெண்களுக்கான தடை தாண்டல் ஓட்டம் (நேரம் - 11.05.25) - இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் லான்ஸ் கோப்ரல் சி ஹேரத்
அஞ்சலோட்டம் (நேரம் 1.52.74) - இலங்கை இலேசாயுத காலாட் படையணி
கோல் ஊன்றி பாய்தல் ஆண்கள் (உயரம் - 5.10) - சிப்பாய் ஏ புவிதரன் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி
மும்பாச்சல் பெண்கள் (தூரம் - 13.04) - இலங்கை இராணுவ மகளிர் படையணி சிப்பாய் இஎம்எஸ் உபேக்ஷா
சம்மட்டி எறிதல் பெண்கள் - இலங்கை இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் சி அமரசிங்க
400 மீ ஆண்கள் (நேரம் - 46.80) - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாய் ஆர்பீஐ லக்க்ஷான்
400 x 4 அஞ்சலோட்டம் ஆண்கள் (நேரம் - 3.11.87) - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி
100 மீ பெண்கள் (நேரம் - 12.04) – சமிக்ஞை சிப்பாய் எல் சபியா இலங்கை சமிக்ஞைப் படையணி
100 x 4 பெண்கள் (நேரம் - 485.84) - 2 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி