Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd February 2023 19:54:41 Hours

இலங்கை அமரபுர முலவன்ஷிக மகா நிகாயவினால் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கௌரவிப்பு

'சாசனம்' மற்றும் நாட்டை வளர்ப்பதற்கு வழங்கப்படும் தவறாத ஆதரவையும், அர்ப்பணிப்புள்ள துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில், ஸ்ரீலங்கா அமரபுர முலவன்ஷிக மகா நிகாய கந்தளாய் தெஹிவத்தை சிறிவத்தன ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில், சனிக்கிழமை (பெப்ரவரி 18) 'ஸ்ரீ ரோஹண ஜனரஞ்சன தேசமான்ய' என்ற கெளரவ தேசபக்தி பட்டத்தை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்களுக்கு வழங்கியது.

இலங்கை அமரபுர முலவன்ஷிக மகா நிகாய மகா நாயக்கர் ராஜகிய பண்டித மஹோபத்ய அதி வண. அஹுங்கல்லே விமலதம்மதிஸ்ஸ தேரர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுடன் இணைந்து அந்தப் பணிகளுக்குப் பங்களித்த 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம மற்றும் கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவுக்கும் கௌரவப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வரலாற்றுப் சிறப்புமிக்க தெஹிவத்த சிறிவத்தன ரஜமஹா விகாரை பாழடைந்து கவனிப்பற்றுக் காணப்பட்ட நிலையில் அதனைக் காப்பாற்றவும் அபிவிருத்தி செய்யவும் அளப்பரிய சேவையாற்றிய ஆயுதப் படைகளின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்களிப்பை இவ்விழா சிறப்பாக எடுத்துரைத்தது.தெஹிவத்தை சிறிவத்தன ரஜமஹா விகாரையின் வண. கலவானே கோசல திஸ்ஸ தேரரின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்த மூன்று சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் அந்த கௌரவப் பட்டங்கள் வழங்கப்பட்டன.