Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th August 2023 20:13:47 Hours

இராணுவ வீரர்கள் தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் 2023-ல் வெற்றி

ஓகஸ்ட் 11 முதல் 14 வரை புத்தளம் பொது மைதானத்தில் நடைபெற்ற இலங்கை தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் 2023-ல் இலங்கை கடற்படை கைப்பந்து அணியை வீழ்த்தி, இலங்கை இராணுவ கைப்பந்து (ஆண்கள்) அணி சாம்பியன்ஷிப் கிண்ணத்தை கைப்பற்றியது.

நான்கு பிரிவுகளின் கீழ் நாடளாவிய ரீதியில் 21 கைப்பந்து (ஆண்கள்) குழுவினர் வீரர்கள் போட்டியிட்டதுடன், இறுதிப் போட்டி இராணுவம் மற்றும் கடற்படை அணிகளுக்கு இடையில் நடைப்பெற்றது. ஆட்டம் முடிவடையும் போது புள்ளிவிபரபலகை முறையே 36 - 31 ஆக காணப்பட்டது.

அதேபோன்று, இலங்கை விமானப்படை அணியுடன் போட்டியிட்ட இராணுவ (பெண்கள்) அணி இரண்டாம் நிலை கிண்ணத்தினை வென்றனர். அப் போட்டியின் புள்ளிவிபரபலகை முறையே 21 - 25 ஆக காணப்பட்டது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க கௌரவ. அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இறுதி போட்டிகளை நேரில் பார்வையிட்டார். இலங்கை இராணுவ கைப்பந்து குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி அவர்கள் திங்கட்கிழமை (ஓகஸ்ட் 14) பரிசளிப்பு விழாவில் பங்கேற்றார்.

இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கோப்ரல் டிஜிஆர் விமலரத்ன இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஆர்டிஏஆர் கருணாரத்ன இராணுவ போர் கருவி படையணியின் சிப்பாய் கேடி பத்மகுமார ஆகியோர் போட்டியின் சிறந்த வீரராகவும், இறுதிப் போட்டியில் சிறந்த கோல் காப்பாளர் மற்றும் சிறந்த வீரர்களுக்கான கிண்ணங்களை பெற்றனர்.