Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ வீரர்கள் ஆண்கள் திறந்த பிரிவு நீச்சல் போட்டிகளில் வெற்றி

46 வது தேசிய மட்ட வயது பிரிவிக்குற்பட்ட நீச்சல் சாம்பியன்ஷிப் 2022 போட்டிகள், சுகததாச உள்ளக நீச்சல் தடாகத்தில் ஜூன் மாதம் 8-11 திகதிகளில் நடைபெற்றன. இப்போட்டிகளில் பங்குபற்றிய ஆண் , பெண் இராணுவ நீச்சல் வீரர்கள் பல தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் வென்றனர்.

கஜபா படையணியின் 2 ம் லெப்டினன் எச்.டி.ஏ.பீரிஸ் 50மீ பெக்ஸ்ட்ரோக் பிரிவில் 26.24 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார்.

அதேபோன்று, ஆண்களுக்கான திறந்த சுற்று போட்டிகளில் சிறந்த நீச்சல் வீரருக்கான விருதை 2 வது (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சாதரண சிப்பாய் ஆர்.ஜி.ஏ கருணாநாயக்க பெற்றுக்கொண்டார். இவர் 5 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சாதனைகள் கீழ்வருமாறு:

ஆண்கள் பிரிவு (17 போட்டிகள்)

தங்கப் பதக்கங்கள் - 16

வெள்ளிப் பதக்கங்கள் - 13

வெண்கலப் பதக்கங்கள் - 11

பெண்கள் பிரிவு (5 போட்டிகள்)

தங்கப் பதக்கம் - 01

வெள்ளிப் பதக்கம் - 04

வெண்கலப் பதக்கம் - 01