Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2022 21:20:12 Hours

இராணுவ வழங்கல் பள்ளியின் பாடநெறி – 23 இன் சான்றிதழ் வழங்கல்

திருகோணமலை இராணுவ வழங்கல் பாடசாலையின் சிரேஷ்ட அதிகாரவணையற்ற அதிகாரிகளுக்கான வழங்கல் பாடநெறி எண்: 23 இன் நிறைவு விழா 2022 நவம்பர் 28 அன்று இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ஈ.எம்.எம் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2022 ஒக்டோபர் 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பாடநெறியில் இலங்கை இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 59 சிரேஷ்ட அதிகாரவணையற்ற அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பாடத்திட்டத்தில் ஏற்கனவே உள்ள வழங்கல் நடைமுறைகளின் கோட்பாடுகள் மற்றும் நடைமுறை பயிற்சிகள் ஆகியவை அடங்கும். ஆங்கில மொழி, தகவல் தொடர்பாடல் மற்றும் கணினி பயிற்சி பாடநெறிகளுக்கு முன்னதாக திருகோணமலை பகுதியில் உள்ள வரலாற்று மற்றும் கல்வி முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதி பாடநெறி பங்கேற்பாளர்களிடம் உரையாற்றும் போது பாடநெறி உள்ளடக்கங்களை தொடர்ந்து மேம்படுத்துதல் மற்றும் திட்டமிட்டபடி பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சார்ஜென்ட் டி.எம்.எஸ்.எல் திசாநாயக்காவிற்கு தகுதியின் அடிப்படையில் முதலாம் இடமும், தகுதி வரிசையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் 7 வது இலங்கை சமிஞ்சை படையணியின் பணிநிலை சார்ஜென்ட் எச்.ஜி.ஆர்.சி ரத்நாயக்க மற்றும் 3 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பணிநிலை சார்ஜென்ட் டி.கே.ஜி.சி.ஏ.கே கருணாரத்ன ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர், இராணுவ வழங்கல் பாடசாலையின் கல்விசார் ஊழியர்கள், நிரந்தர பணியாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவணையற்ற அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.