Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2023 18:55:44 Hours

இராணுவ வளங்கல் தளபதி இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்திற்கு விஜயம்

இராணுவ வளங்கல் தளபதியும் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் அவர்கள் பொல்ஹோங்கொடவில் உள்ள இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி தலைமையகத்திற்கு வியாழன் (மார்ச் 30) நிர்வாக பரிசோதனைக்காக விஜயம் செய்தார்.

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன் அவர்களை அன்புடன் வரவேற்கும் முன் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பணிநிலை அதிகாரிகள் மேஜர் ஜெனரல் இந்து சமரக்கோனுடன் சிறிது நேரத்தின் பின்னர் படையணியின் நிர்வாக மற்றும் வளங்கல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர். மேலும், வருகை தந்த இராணுவ வளங்கல் தளபதி மேம்பாடுகளுக்கான அறிவுறுத்தல்களை வழங்கியதுடன், படையணியின் சுமூகமான நிர்வாக மற்றும் வளங்கல் செயல்பாடுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டினார்.

அமர்வின் முடிவில், இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் ரவீந்திர அபேசிங்க நன்றியுரையை வழங்கியதுடன் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணிக்கு முதல் விஜயத்தின் நிமித்தமாக இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன் அவர்கள் இராணுவ வளங்கல் தளபதிக்கு நினைவு சின்னம் ஒன்றினை வழங்கினார்.