Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th October 2023 21:15:23 Hours

இராணுவ மரியாதையுடன் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் லயனல் பலகல்ல (ஓய்வு) அவர்களுக்கு இறுதி அஞ்சலி

இலங்கை இராணுவத்தின் 16வது தளபதியான ஜெனரல் எல்.பி பலகல்ல (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ ஐஜி அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று (28) பிற்பகல் பொரளை பொது மயானத்தை நோக்கி பௌத்தலோக மாவத்தை வழியாக இறுதி சடங்குகள் மற்றும் இராணுவ மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டது. இரங்கல் தெரிவிக்கும் மக்கள், உறவினர்கள், இராணுவ வீரர்கள், முன்னாள் இராணுவத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், பாடநெறி நண்பர்கள் மற்றும் அவரது மணைவி மற்றும் உறவினர்கள் இராணுவ இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.

இறுதி ஊர்வலம் கல்லறையின் நுழைவாயிலை அடைந்ததும் இராணுவ மரபுகளின்படி சிப்பாய்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் முறையாக பூதவுடலை பெற்றதுடன், சவப் பேழையை தேசியக் கொடியினால் போர்த்தப்பட்டு, துப்பாக்கி வண்டியில் வைக்கப்பட்டு பேழையின் பின்னால் படையினர் அணிவகுத்துச் சென்றனர்.

இராணுவத் தளபதியினால் வெளியிடப்பட்ட முறையான சிறப்புப் கட்டளை I நிகழ்வில் துக்கத்தில் இருந்தவர்களுக்கு வாசிக்கப்பட்டது. இராணுவ மரபுகளுக்கு இணங்க படையினர் இறந்தவருக்கு வணக்கம் செலுத்தி அடையாள துப்பாக்கி வணக்கத்தை செலுத்தினர், இது ஒர் இராணுவ அதிகாரியின் மறைவின் போது பெறக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலி ஆகும்.கடைசி வாசிப்பிற்கு பிறகு, சிரேஸ்ட வீரர் அவரது நித்திய ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி எழுப்பப்பட்டதன் பின்னர் உடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அதைத் தொடர்ந்து, மறக்க முடியாத சேவையை ஆற்றிய சிரேஷ்ட அதிகாரியின் சிதைக்கு துப்பாக்கி முழங்கல் வணக்கம் செலுத்தப்பட்டது.

அதன் பின்னர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் ஜெனரல்எல்.பி பலகல்ல (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ ஐஜி அவர்கள் தனது வாழ்க்கையில், ஆயுதப்படையில் பெற்ற புகழ்களுக்காக அவரது குடும்பத்திற்கு சின்னங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

ஜெனரல் பலகல்ல அவர்கள் தனது இராணுவ வரலாற்றில் 39 ஆண்டுகளுக்கும் மேலான குறிப்பிடத்தக்க பணியில், குறிப்பாக இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் (2000-2004) தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதிக அளவிலான தொழில் நிபுணத்துவத்தையும், மிகுந்த அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார். நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு எதிரான போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருந்த போது ஒரு குருகிய காலத்திற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாகவும் பதவி வகித்தார்.

இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட சிறப்பு கட்டளை 1 பின்வருமாறு;