Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th April 2024 18:14:41 Hours

இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி தியத்தலாவ இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனககே ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தி இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ அவர்கள் தியத்தலாவ பொக்ஸ் ஹில் சூப்பர் குரோஸ் விபத்தில் காயமடைந்தவர்களின் நலம் விசாரிக்கும் நோக்கத்துடன் 22 ஏப்ரல் 2024 அன்று தியத்தலாவ இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி அவர்களின் வேண்டுகோளின் பேரில் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி அவர்களுக்கு உதவும் வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியதுடன் அவர்கள் விரைவாக குணமடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.