Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th June 2023 19:08:50 Hours

இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி கடமை பொறுப்பேற்பு

புதிய இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியாக இலங்கை பீரங்கிப் படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூஎஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் வியாழக்கிழமை (ஜூன் 08) இராணுவத் தலைமையகத்தில் பதவியேற்றார். இலங்கை இராணுவத்தின் 3 வது சிரேஷ்ட நியமனமாகும்.

பௌத்த பிக்குகளின் ‘செத்பிரித்’ பராயணங்களுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். பின்னர், அவர் பிக்குகளுக்கு ‘பிரிகர’ மற்றும் ‘கிலான்பச’ வழங்கி ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

இந்த புதிய நியமனத்திற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டபிள்யூஎஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் கொஸ்கமவில் உள்ள இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் தளபதியாகப் பணியாற்றி வந்தார்.

சிரேஷ்ட அதிகாரிகள், பிரதி பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் பணியாளர்கள் மற்றும் சிப்பாய்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேஜர் ஜெனரல் டபிள்யூஎஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் சுருக்கமான விவரம் பின்வறுமாறு;

1968 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி பிறந்த இவர் ஆனந்த கல்லூரியின் பெருமைக்குரியவர். பாடசாலை படிப்பின் போது, அவர் படிப்பிலும் தடகளத்திலும் சிறந்து விளங்கி, அவருடைய பாடசாலைக்கு பெருமையையும் புகழையும் பெற்று கொடுத்தார்.

அவர் 1987 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் பயிலிலவல் அதிகாரியாக பாடநெறி 27 இன் கீழ் இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் இரண்டாவது லெப்டினன் நிலைக்கு நியமிக்கப்பட்டார். 10 டிசம்பர் 1988 இல் இலங்கை இராணுவத்தின் நேர்த்தியான படையணியான இலங்கை பீரங்கி படையணியில் இணைந்தார். அவர் 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி 4 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரியாக பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார்.

இலங்கை இராணுவ வரலாற்றில் மிகவும் அரிதாக கருதப்படும் நிகழ்வுகளில் ஒன்றான, மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் தந்தையான லெப்டினன் ஜெனரல் (ஓய்வு) ஹமில்டன் வனசிங்க வீஎஸ்வீ அவர்களிடம் இருந்து அதிகாரவாணை வாளைப் பெற்ற ஒரே அதிகாரியாவார்.

அவரது இராணுவ வாழ்க்கை முழுவதும், அவர் கட்டளை, பணிநிலை மற்றும் பயிற்சியாளர் நியமனங்களில் பணியாற்றியுள்ளார், இது இலங்கை இராணுவத்தில் அந்தந்த நியமனங்களில் அவரது அசாதாரண திறன்களை எடுத்துக்காட்டுகிறது. மே 2009 க்கு முன்னர் 22 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கையின் போது அவர் தனது போர் கடமைகளின் மீது விதிவிலக்கான அர்ப்பணிப்புடன் தீவிரமாக உறுதியளித்தார்.

அவரது நியமனங்களில் 4 வது இலங்கை பீரங்கிப் படையணியின் கட்டளை அதிகாரி, மார்க்ஸ்மேன்ஷிப் மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி பாடசாலையின் நிறைவேற்று அதிகாரி, பொது பணிநிலை அதிகாரி 3 (செயல்பாடுகள்) 26 வது பிரிகேட் மேஜர் மற்றும் இலங்கை தொடர்பாடல் பிரிவின் கட்டளை அதிகாரி, இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2 (நிர்வாகம்). 14 வது இலங்கை பீரங்கி படையணியின் இரண்டாவது கட்டளை அதிகாரி, 21 வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைத்தல்), மார்க்ஸ்மேன்ஷிப் மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி, 59 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி, 682 வது காலாட் பிரிகேட் தளபதி, 144 வது காலாட் பிரிகேட் தளபதி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் (நிர்வாகம்), வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம், 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, இலங்கை இராணுவத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் இராணுவத் தலைமையகம், முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி, என்பவற்றுடன் தற்போது இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாக பதவியேற்றுள்ளார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் இலங்கையில் மார்க்ஸ்மேன்ஷிப் மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி பாடசாலையின் அடிப்படை மார்க்ஸ்மேன்ஷிப் பாடநெறி, படையணி பயிற்சி பாடநெறி மற்றும் தூர துப்பாக்கி சுடும் பயிற்சி, ஐக்கிய இராச்சியம் சாண்ட்ஹர்ஸ்ட் இராணுவ பாடநெறி (1989), பீரங்கி பாடநெறி இளம் அதிகாரி பாடநெறி (1991) பாக்கிஸ்தான், அதிகாரிகள் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி (1995) இந்தியா, பீரங்கி தொழிலான்மை பாடநெறி (2006) பாகிஸ்தான், ஸ்னைப்பர் சுடும் பயிற்சிப் பாடநெறி (2008) பங்காளதேஸ், சீனா பீரங்கி படையலகு கட்டளை பாடநெறி (2011), துருக்கியில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஆயுத மோதல் குறைப்பு மற்றும் சீனாவில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி (2018) போன்ற பாடநெறிகளை கற்றுள்ளார்.

அவர் சீனாவில் உள்ள பெய்ஜிங்கின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் ஆவார், அங்கு அவர் மூலோபாய இராணுவ ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட அதிகாரி ரண சூர பதக்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளார். அவரது களங்கமற்ற சேவைக்காக அவர் விசிஷ்ட சேவா விபூஷணய பதக்கம் மற்றும் உத்தம சேவா பதக்கம் ஆகியவற்றாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளார். அவர் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், பூர்ண பூமி பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம் மற்றும் ரிவிரெச சேவை பதக்கம் ஆகியவற்றையும், 1998 இல் 50 வது சுதந்திர ஆண்டு பதக்கம், 1999 இல் இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு பதக்கம், 2023 இல் 75 வது சுதந்திர தின நினைவு பதக்கம், இலங்கை ஆயுத சேவைகள் நீண்ட சேவை பதக்கம், சேவாபிமானி பதக்கம் மற்றும் சேவை பதக்கம் என்பவற்றை பெற்றுள்ளார்.

தற்போது, சிரேஷ்ட அதிகாரி, இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியாக கடமைகளை ஆற்றி வருகிறார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் திருமதி சாமா வனசிங்க என்பவரை மணந்து ஒரு மகனைப் பெற்றுள்ளார்.