Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ படையணிகளுக்கு இடையில் நடைபெற்ற கிரிக்கட் போட்டிகள்

இராணுவ படையணிகளுக்கு இடையில் நடைபெற்ற கிரிக்கட் போட்டிகளில் இலங்கை மின்சார பொறியியல் படையணி,இலங்கை படைக்கலச் சிறப்பணி,இராணுவ பொலிஸ் படையணி,இலங்கை பீரங்கிப் படையணிகள் வெற்றி பெற்றன. ஏ’ பிரவின் கீழ் நடைபெற்ற கிரிக்கட் போட்டிகள் ஜூலை மாதம் 27ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை பனாகொடை மற்றும் மத்தேகொட இராணுவ பொறியியலாளர் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற படையணிகளின் விபரங்கள் கீழ்வருமாறு

இலங்கை மின்சார பொறியியல் படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் இலங்கை மின்சார பொறியியல் படையணி 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.

இலங்கை இராணுவ சேவை படையணி மற்றும் பொறியியலாளர் சேவை படையணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் பொறியியலாளர் சேவை படையணி 28 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இலங்கை சிங்க படையணி மற்றும் இலங்கை படைக்கலச் சிறப்பணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் இலங்கை படைக்கலச் சிறப்பணி 86 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இராணுவ பொலிஸ் படையணி மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் இராணுவ பொலிஸ் படையணி 7 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.

இலங்கை பீரங்கிப் படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் இலங்கை பீரங்கிப் படையணி 128 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

Adidas footwear | Nike nike dunk high supreme polka dot background , Gov