Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th August 2023 18:00:34 Hours

இராணுவ படையணிகளுக்கு இடையிலான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் கஜபா படையணி வெற்றி

இராணுவ படையணிகளுக்கிடையிலான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி புதன்கிழமை (09) மத்தேகொட ஸ்குவாஷ் மைதானத்தில் உள்ள ஹோம் ஆஃப் சேப்பர்ஸில் நிறைவடைந்தது. பத்து நாட்கள் தொடர்ந்த போட்டிகளில் 13 வெவ்வேறு படையணிகளை சேர்ந்த வீரர்கள் 11 போட்டி நிகழ்வுகளில் போட்டியிட்டு தங்கள் இணையற்ற திறன்களையும் உறுதியையும் வெளிப்படுத்தினர்.

சாம்பியன்ஷிப்பின் இறுதி நாள் தடகள திறன்கள் மற்றும் தோழமைகளின் துடிப்பான திறன்களை வெளிப்படுத்தியது. அரங்கில் நிரம்பியிருந்த பார்வையாளர்களின் உற்சாகமான ஆரவாரத்துடன் வீரர்கள் விளையாட்டுத் திறமை மற்றும் தடகள திறமையை வெளிப்படுத்தினர்.

இலங்கை இராணுவ பிரதான களப் பொறியியலாளரும் இலங்கை இராணுவ ஸ்குவாஷ் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இறுதிப் போட்டிகளைக் கண்டுகளித்ததுடன் பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டார்.

கடும் போட்டிகளுக்குப் பின் கஜபா படையணி ஆடவர் திறந்த அணி சாம்பியன்ஷிப்பில் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டதுடன் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது. இலங்கை பொறியியல் படையணி மூன்றாம் இடத்தைப் பெற்றது.

பொறியியல் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்கே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, இலங்கை பொறியியல் படையணி நிலையத்தளபதி பிரிகேடியர் எம்பீகே மதுரப்பெரும ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ ஸ்குவாஷ் குழு உப தலைவர் பிரிகேடியர் கேஎம்என் குலசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ ஸ்குவாஷ் குழு செயலாளர் கேணல் பிஏஎம்பீ பாலசூரிய ஆர்எஸ்பீ இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்தின் தலைவர் கெப்டன் நாமல் விஜேசுந்தர (ஓய்வு) மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இறுதிப் போட்டிகளை ரசித்து பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

போட்டிமுடிவுகள் பின்வருமாறு:

ஆண்கள் புதியவர்கள்

முதலாமிடம் – கன்னர் எஸ்எம்டிஎல் சுரவீர இலங்கை இராணுவ பீரங்கி படையணி

இரண்டாமிடம் - கோப்ரல் டபிள்யூ.ஜி.ஆர்.எல் சந்தரூவன் விஜயபாகு காலாட் படையணி

பெண்கள் புதியவர்கள்

முதலாமிடம் – சிப்பாய் எம்.எம் பிரபோதினி இலங்கை பொறியியல் படையணி

இரண்டாமிடம் – சிப்பாய் ஜே.கே.ஆர் சமந்திகா இலங்கை பொறியியல் படையணி

அதிகாரிகள் திறந்த பிரிவு

முதலாமிடம் – கெப்டன் எல்இஎஸ் லியனகே இலங்கை பொறியியல் படையணி

இரண்டாமிடம் – கெப்டன் ஜேஏ கருணாரத்ன யுஎஸ்பீ விஜபாகு காலாட் படையணி

பெண் அதிகாரிகள் திறந்த பிரிவு

முதலாமிடம் – கெப்டன் எச் எம் அபேரத்ன இலங்கை இராணுவ பொது சேவை படையணி

இரண்டாமிடம் – பெண் பயிலிளவல் அதிகாரி எம் ஜீ அபேரத்ன

ஆண் திறந்த பிரிவு

முதலாமிடம் – லான்ஸ் கோப்ரல் எஸ்என் டேனியல் கஜபா படையணி

இரண்டாமிடம் – லான்ஸ் கோப்ரல் ஆர் எம்எஸ்எல் கே ஏக்கநாயக்க தேசிய பாதுகாவலர் படையணி

பெண் திறந்த பிரிவு

முதலாமிடம் – பெண் பயிலிளவல் அதிகாரி எம் ஜீ அபேரத்ன

இரண்டாமிடம் – கெப்டன் எச் எம் அபேரத்ன இலங்கை இராணுவ பொது சேவை படையணி

35 வயதிற்கு மேல்

முதலாமிடம் – சார்ஜன் டிஎம்ஆர் திசாநாயகக் இலங்கை இலேசாயுத காலாட் படையணி

இரண்டாமிடம் – கோப்ரல் ஆர்யுஎம் ராஜபக்ஷ இலங்கை இலேசாயுத காலாட் படையணி

45 வயதிற்கு மேல்

முதலாமிடம் – கெப்டன் ஜே ஏ கருணாரத்ன யுஎஸ்பீ விஜயபாகு காலாட் படையணி

இரண்டாமிடம் – மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ

50 வயதிற்கு மேல்

முதலாமிடம் – மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ

இரண்டாமிடம் – கெப்டன் டப்ளியு ஏ சில்வா கஜபா படையணி

ஆண்கள் திறந்த குழு

முதலாமிடம் – கஜபா படையணி

இரண்டாமிடம் – இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

மூன்றாமிடம் - இராணுவ பொறியியல் படையணி

ஆண்கள் புதியவர்கள் குழு

முதலாமிடம் – இராணுவ பீரங்கி படையணி

இரண்டாமிடம் – இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி