Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

இராணுவ நீச்சல் வீரர்கள் இரண்டாவது தடவையாக தேசிய இடைநிலை வயதுப் பிரிவு போட்டியில் வெற்றி

தேசிய இடைநிலை சாம்பியன்ஷிப் 2018 ஆம் ஆண்டிற்கானபோட்டிகள் சர்வதேச மட்ட போட்டியாளர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றன. இந்த போட்டியில் இலங்கை இராணுவத்தின் நீச்சல் வீரர்கள் முதலிடத்தை பெற்றுக் கொண்டார்கள். இந்த போட்டிகள் ஜூன் மாதம்21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை கொழும்பில் உள்ள சுகததாஸ உள்ளரங்க நீச்சல் தடாகத்தில் இடம்பெற்றன.

இந்த போட்டிகள் இலங்கை நீர் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டன. இலங்கையிலுள்ள விளையாட்டு கழகம் மற்றும் 93 பாடசாலையைச் சேர்ந்த 700 நீச்சல் போட்டியாளர்கள் இந்த போட்டியில் பங்கு பற்றினர்.

இலங்கை இராணுவ நீச்சல் அணியைச் சேர்ந்த 34 போட்டியாளர்கள் பங்கு பற்றினர். இவர்களில் மூன்று வீராங்கனைகளும் உள்ளடங்குவார்கள். இவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு 14 தங்கப் பதக்கங்களையும், 13 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 15 உலோக பதக்கங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஒலிம்பிக் போட்டியில் 50 Back Stroke நீச்சல் போட்டியில் பங்கு பற்றி சாகசங்களை புரிந்து பெயரை நிலை நாட்டியுள்ள அமெரிக்க நாட்டைச் சேர்ந்த லியம் டென்கோக் அவர்கள் வருகை தந்து வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் வெற்றி கிண்ணங்களை வழங்கி வைத்தார்.