Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2023 21:30:21 Hours

இராணுவ நலத்திட்டங்களின் பயனாளிகளாக வாகரை மக்கள்,

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் 233 காலாட் பிரிகேட்டின் படையினரால் தனது கட்டளை பிரதேசங்களில் வாழும் ஏழைப் மக்களின் சுகாதாரத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன், நடமாடும் மருத்துவ முகாம் நடாத்தியதுடன் வாகரை மகா வித்தியாலய மாணவர்களுக்கு ரூ.200,000/= பெறுமதியான 150 பாடசாலை உபகரண பொதிகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 09) விநியோகித்தனர்.

களனிப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் குடும்ப வைத்தியத் துறையின் அனுசரணையுடன் இரண்டு செயற்திட்டங்களும் சாத்தியமாக்கப்பட்டன. மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, செவிப்புலன் மற்றும் பேச்சு சோதனை, உடற் திணிவு சோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, இரத்த சர்க்கரை பரிசோதனை, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவ கண்காட்சி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

200 க்கும் மேற்பட்ட மக்கள் வாகரை மகா வித்தியாலய நடமாடும் மருத்துவ முகாமில் ஆலோசனை பெற்றதுடன் மருந்துகள் மற்றும் அனைத்து இலவச மருத்துவ பரிசோதனைகளையும் பெற்றுக் கொண்டனர்.

மேலும், முகாமின் போது சுமார் 250,000/= பெறுமதியான மருந்து மற்றும் மூக்கு கண்ணாடிகள் விநியோகிக்கப்பட்டன. 233 காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏகேசிஎஸ் டி சில்வா ஆர்எஸ்பீ, சிவில்-இராணுவ ஒத்துழைப்பு திட்டங்களில் ஒன்றாக பல்கலைக்கழக பேராசிரியர் திரு ஜானக ராமநாயக்க, டாக்டர் டினுஷா பெரேரா மற்றும் 31 மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

233 வது காலாட் பிரிகேட் முன்னாள் தளபதி பிரிகேடியர் ஆர்டபிள்யூகே ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, 233 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏகேசீஎஸ் டி சில்வா ஆர்எஸ்பீ, 9 வது இலங்கை பீரங்கிப் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் எம்ஐஎஸ் சந்திர குமார யூஎஸ்பீ, 6 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி ஆர்எம்எல்ஐ ரத்நாயக்க , அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சமூகம் சார்ந்த இரு திட்டங்களிலும் பங்குபற்றினர்.