Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ தளபதி காற்பந்து சவால் கிண்ண போட்டியில் இரண்டு கிளி. அணிகள் ஷாம்பியன்

யாழ், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 25 உதைபந்தாட்ட அணிகள் பங்குபற்றிய இராணுவத் தளபதி காற்பந்து சவால் கிண்ணம் (வட மாகாணம்) சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி திங்கட்கிழமை (28) கிளிநொச்சி வட மாகாண விளையாட்டு வளாக மைதானத்தில் இடம் பெற்றது. இப்போட்டியில் 'புனித மேரிஸ் - கிளிநொச்சி' மற்றும் 'உருத்திபுரம் கிளிநொச்சி' என்ற இரண்டு அணிகளின் போட்டியிட்டன.

இப்போட்டியானது நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுடன் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க மற்றும் 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ் ஆகியோரின் கருத்தின் அடிப்படையில் 572 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் துஷான் விமலசேன அவர்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

போர் கடுமையாக இருந்த கிளிநொச்சியில் 3 தசாப்தங்களுக்குப் பின்னரில் இருந்து முதல் விளையாட்டு விழா இதுவாகும். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திரு ஆர் கேதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள் கட்டளை அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பெரும் தொகையான விளையாட்டு ரசிகர்களின் ஆரவாரம் மற்றும் கைதட்டல்களுக்கு மத்தியில் இறுதிப் போட்டிகள் இடம் பெற்றன.

இறுதிப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தமையால் இணை ஷாம்பியன்களுக்கும் வெற்றி கிண்ணம் மற்றும் பதக்கங்களுடன் ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ. 150,000.00 மற்றும் 4 நடுவர்களுக்கு நினைவுப் பரிசுகளுடன் சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. போட்டியின் போது காட்டப்பட்ட அவர்களின் திறமைக்காக பின்வரும் வீரர்கள் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த வீரர் - டி பிரதீபன் (உருத்திபுரம் கிளிநொச்சி)

சிறந்த கோல் காப்பாளர் - டி கோகுலராஜ் (உருத்திபுரம் கிளிநொச்சி)