Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st March 2019 08:08:21 Hours

இராணுவ தடகள சாம்பியன்ஷிப்இறுதி நாள் போட்டிகள்

இலங்கை இராணுவத்தின் 20 ஆவது தடகள சம்பியன் இறுதி தின போட்டிகள் இம் மாதம் (20) ஆம் திகதி மாலை சுகததாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா அவர்கள் வருகை தந்தார். இவரை இராணுவ தடகள சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்கள் வரவேற்றார்.

இராணுவ படையணிகளுக்கு இடையிலுள்ள 400 விளையாட்டு வீர ர்களின் பங்களிப்புடன் இம் மாதம் 19 – 20 ஆம் திகதிகளில் இந்த போட்டிகள் கொழும்பிலுள்ள சுகததாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டிகளில் இராணுவ சேவைப் படையணி 139 புள்ளிகளை பெற்று சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், கெமுனு படையணி 134 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தையும், விஜயபாகு காலாட் படையணி 84 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.

மேலும் மகளீர் படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளில் 2 (தொண்டர்) மகளீர் படையணி 105 புள்ளிகளை பெற்று சம்பியனாக விளங்கியதுடன், 7 ஆவது மகளீர் படையணி 100 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தையும், இராணுவ சமிக்ஞை மகளீர் படையணி 64 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது.

இரண்டு நாள் இடம்பெற்ற போட்டிகளில் புதிய 9 பதிவுகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்த நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர, இராணுவ லொஜஷ்டிக் தளபதி மேஜர் ஜெனரல் சி.எஸ் அடிபொல, இராணுவ தொண்டர் படையணியின் பிரதி படைத் தளபதி மேஜர் ஜெனரல் எல்.ஈ கஸ்தூரியாரச்சி, இராணுவ பேண்ட் இசை மற்றும் கலை பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பரீஸ் யூசுப், படையணிகளின் பிரதி கட்டளை தளபதிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

இந்த போட்டியின் விபர புள்ளி அறிக்கைகள் கீழ்வருமாறு: Best Sneakers | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!