Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2023 00:17:00 Hours

இராணுவ டேக்வாண்டோ வீரர்கள் கொரிய தூதர் கிண்ணத்தை வென்றனர்

சனிக்கிழமை (ஜூலை 8) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கொரிய தூதுவர் கிண்ண டேக்வாண்டோ போட்டியில், இலங்கை இராணுவத்தின் டேக்வாண்டோ வீரர்கள் அனைத்து முக்கிய ஆண் மற்றும் பெண் பிரிவுகளில் வெற்றி பெற்று அதிக எண்ணிக்கையிலான நிகழ்வுகளில் சாம்பியன்ஷிப்பை வென்றனர்.

இராணுவ வீரர்கள் 54 - 68 கிலோ ஆண்கள் பிரிவு, 46 - 58 கிலோ மற்றும் 61 - 75 கிலோ பெண்கள் பிரிவு மற்றும் ஏரோபிக்ஸ் போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்றதுடன் 54 - 68 கிலோ ஆண்கள் பிரிவில் பி அணி இரண்டாம் இடத்தையும் கைப்பற்றினர்.

போட்டியின் மைல்கல் வெற்றிகள் மற்றும் இராணுவத்தின் ஆண் மற்றும் பெண் வீரர்களின் செயல்பாடுகள் பொதுபணி பணிப்பாளர் நாயகமும் இராணுவ டேக்வாண்டோ கழகத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்களினால் பாராட்டு விழாவின் போது பாராட்டப்பட்டது.

31 ஆண் மற்றும் பெண் இராணுவ டேக்வாண்டோ வீரர்கள் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியதுடன் அவர்கள் சாம்பியன் கிண்ணத்தை கடுமையான போட்டிக்கு மத்தியில் பெற்றுக் கொண்டனர்.

பொதுபணி பணிப்பாளர் நாயகமும் இராணுவ டேக்வாண்டோ கழகத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ, விளையாட்டு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சீ, 144 வது பிரிகேட் தளபதியும் இராணுவ டேக்வாண்டோ கழகத்தின் பிரதித் தலைவருமான பிரிகேடியர் கேம்வி கொடிதுவக்கு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இறுதிப் போட்டிகளைப் பார்வையிட்டதுடன் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.