Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th June 2023 19:31:45 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் முதலாவது ஆண்டு நிறைவிற்கு மத ஆசிர்வாதம்

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 16வது தலைவியாக திருமதி ஜானகி லியனகே அவர்கள் பதவியேற்று முதலாவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, கோட்டை ஸ்ரீ நாக விகாரையில் 'பொசன்' பௌர்ணமி தினத்தன்று (ஜூன் 03) மத நிகழ்வுகள் இடம்பெற்றன. இந் நிகழ்வானது சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சேவை வனிதையர் பிரிவின் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந் நிகழ்வில் ‘புத்த பூஜை’, தானம் வழங்கல் மற்றும் தேரர்களுக்கு ‘பிரிகர’ வழங்குதல் போன்ற முக்கிய நிகழ்வுகளும் இடம் பெற்றன.

இராணுவ ‘ஹெவிசி’ குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட வண்ணமயமான ஊர்வலம், பண்டைய சம்பிரதாயத்திற்கு இணங்க பிக்குகள் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கோட்டை ஸ்ரீ நாக விகாரையின் அதிபதி வண. வதுரவில சுஜாதா தேரர், அன்னதான நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக ‘பொசன்’ பௌர்ணமி தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

இராணுவத் தளபதி, இராணுவத்தில் சேவையாற்றும் சேவையாற்றியவர்கள், காயமடைந்தவர்கள், சிவில் பணியாளர்கள் அனைவருக்கும் ஆசிகள் வழங்கப்பட்டதுடன் உயிரிழந்த இராணுவம் மற்றும் ஏனைய படைகளின் மாவீரர்களுக்கு முத்திக்கான வேண்டுதலும் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் 'புத்த பூஜை' வழங்கிய பின்னர், ஏனைய இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் சேர்ந்து மகா சங்க உறுப்பினர்களுக்கு தானம் வழங்கினார்.

தானம் முடிந்ததும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மனைவி தீவிர நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கோப்ரல் ஒருவரின் வீட்டிற்குச் சென்று சில பரிசுகளையும் நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உபதலைவி திருமதி தனுஷ வீரசூரிய, செயலாளர் திருமதி சாமா வனசிங்க, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் என் மஹாவிதான கேஎஸ்வீ ஆகியோர் இந்த சிறப்பு நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.