Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th May 2018 16:20:59 Hours

இராணுவ குத்துச் சண்டை வீரர்கள் (ஆண்கள் மற்றும் மகளிர்) குழுவினர் பாதுகாப்பு சேவை குத்துச் சண்டை போட்டியில் வெற்றி

இலங்கை விமானப்படை குத்துச் சண்டை கழகத்தினரின் ஏற்பாட்டில் பாதுகாப்பு சேவை குத்துச் சண்டை போட்டி 2018 க்கான குத்துச் சண்டை போட்டி மே மாதம் 9 ஆம் திகதி மற்றும் 10 ஆம் திகதிகளில் கட்டுநாயக இலங்கை விமானப்படைத் தலைமையகத்தில் அமைந்திருக்கும் குத்துச் சண்டை மேடையில் இடம் பெற்றதுடன் இப் போட்டியில் இராணுவ குத்துச் சண்டை வீர வீராங்கனைகள் போட்டியிட்டு தமது திறமைகளை வெளிகாட்டினர்.

ஆதன்படி முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்டும் சர்வதேச மட்டத்தில் வரவேற்கும் வகையில் போட்டியிட்னர்.

இப் போட்டியில், இராணுவ ஆண்கள் குத்துச் சண்டை குழுவினரில் 6 தங்க பதக்கங்களும், 3 வெள்ளி பதக்கம் மற்றும் 1 வென்கலப் பதக்கமும் மொத்தம் 10 பதக்கங்களும் பெற்றுக் கொண்டதுடன் பாதுகாப்பு சேவை குத்துச் சண்டை போட்டி 2018 க்கான வெற்றிப் பெற்று இலங்கை இராணுவ மகளிர்க்கான குத்துச் சண்டை குழுவினர் வெவ்வேறு எடையின் கீழ் மூன்று தங்கம் மற்றும் மூன்று வெள்ளி பதக்கங்களை வென்றது.

இலங்கை இராணுவ குத்துச் சண்டை கழகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் மற்றும் இலங்கை இராணுவ குத்துச் சண்டை வீர வீரங்கனைகளால் இந்த வெற்றி பலப்படுத்தப்பட்டது.

Adidas shoes | Air Max