Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th September 2023 08:06:47 Hours

இராணுவ கராத்தே வீரர்கள் பாதுகாப்பு சேவைகள் கராத்தே சாம்பியன் ஷிப் 2023ல் வெற்றி

பாதுகாப்பு சேவைகள் கராத்தே சாம்பியன்ஷிப் - 2023 செப்டம்பர் 18-19 திகதிகளில் கொழும்பில் உள்ள இலங்கை விமானப்படை உள்ளக அரங்கில் முப்படை வீரர்களின் பங்குபற்றலுடன் நிறைவு பெற்றது.

போட்டியின் போது இலங்கை இராணுவ அணி (ஆண்கள் பிரிவு) 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று, சாம்பியன்ஷிப்பைத் தட்டிச் சென்றது. இலங்கை விமானப்படை அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

பெண்கள் பிரிவில், இலங்கை விமானப்படை கராத்தே அணி சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியதுடன் இராணுவ அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.