Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st February 2023 23:49:36 Hours

இராணுவ ஒருங்கிணைப்பில் பிக்குகளுக்கு மருத்துவ உதவி

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் கிடைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை பொலனறுவை, ஹத்ரஸ் எல ஸ்ரீ போத்திருக்கராம விகாரையில் வசிக்கும் பௌத்த பிக்குகளுக்கு வெள்ளிக்கிழமை (27) அன்பளிப்பு செய்யப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்கள் விகாரைக்கு வருகை தந்து, ஒரு இலட்சம் ரூபா பெருமதியான மருந்து பொருட்களை விகாரையில் உள்ள பொறுப்பாளர்களிடம் கையளித்தார்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாக கொண்ட திருமதி யசோமி பதிரகே மற்றும் திருமதி இனோகா காரியவசம் ஆகியோரின் அனுசரனையில் ‘தெஹிமி அறக்கட்டளையின்’ திருமதி சசிகலா குணரத்ன மற்றும் முஸத் ஹதவத் அறக்கட்டளையின் திருமதி நதி சமரசிங்க ஆகியோரின் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

சக்கர நாற்காலிகள், மின்சார உபகரணங்கள், படுக்கை விரிப்புகள் மற்றும் விகாரையில் நோயுற்ற பிக்குகளுக்கு தேவையான மருந்து பொருட்கள் வழங்கப்பட்டன. கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி, கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரி கேணல் ரஜீவ் பெர்னாண்டோ, கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்பி ஹல்பகே பல அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.