Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th October 2022 14:27:53 Hours

இராணுவ ஊடக பணிப்பாளராக பிரிகேடியர் ரவி ஹேரத் பதவியேற்பு

இலங்கை சமிக்ஞைப் படையணியை சேர்ந்த பிரிகேடியர் ரவி ஹேரத் இன்று (6) காலை இராணுவத் தலைமையகத்தில் 19 வது புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவப் பேச்சாளராக, மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரித்' பராயணங்களுக்கு மத்தியில் தனது அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தற்பொழுது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன அவர்களுக்கு பதிலாகவே இந்த நியமனத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பௌத்த தேரர்களுக்கு 'பிரிகர' வழங்கிய பின்னர், அவர் பல அதிகாரிகளுடன் இணைந்து பாரம்பரிய மங்கள விளக்கை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து பிரிகேடியர் ரவி ஹேரத் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் கலந்துரையாடியதுடன் அவரின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த நியமனத்திற்கு முன்னர் இவர் இராணுவ தலைமையகத்தில் முன்னோக்கு திட்டமிடல் மற்றும் அமுலாக்கப் பிரிவு பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

இந்த எளிமையான வைபவத்தில் சமிக்ஞை பிரிகேட் தளபதி பிரிகேடியர் இமல அஸ்ஸலாராச்சி, இலங்கை சமிக்ஞைப் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் சுதந்த பொன்சேகா, ஊடக கேணல் கேணல் தம்மிக அதிகாரி, ஊடக ஆலோசகர் திரு.சிசிர விஜேசிங்க, 12 வது இலங்கை சமிக்ஞைப் படையணி கட்டளை அதிகாரி , பொதுப் பதவி நிலை அதிகாரி 1 லெப்டினன் கேணல் பிமால் ஜயசாந்த, பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஊடக பணிப்பக சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

மாத்தளையில் பிறந்த இவர், 1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டு 1991 ஆம் ஆண்டு தியத்தலாவை இலங்கை இராணுவ எகாடமியில் (SLMA) இரண்டாவது லெப்டினனாக நியமிக்கப்பட்டார்.

பிரிகேடியர் ரவி ஹேரத், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியில் பிஎஸ்சி (psc) பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளதோடு களனிப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் கற்கைகளில் (M.Def.S) முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். மேலும் இந்தியாவின் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எம்பில் (MPhil) பட்டப்படிப்பினையும் நிறைவு செய்துள்ளார்.

அவர் ஐக்கிய இராஜ்ஜியத்தில் Cougar Repair மற்றும் பராமரித்தல் பாடநெறி, இந்தியாவில் சிக்னல் கம்பெனி தளபதி பாடநெறி , பின்லாந்தில் NORDEFCO/ஒருங்கிணைந்த நெருக்கடி முகாமைத்துவ பாடநெறி, ஹவாயில் பன்னாட்டுத் தொடர்பு விசாரணைத் திட்டம் (MCIP) மற்றும் இந்தியாவில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரி பாடநெறி, பங்காலதேஷில் உள்ள ஜெஸ்ஸோர் சமிக்ஞை பயிற்சி பாடசாலை, இளம் அதிகாரிகள் பாடநெறி உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பாடநெறிகளை பின்பற்றியுள்ளதோடு மற்றும் ஐ.நா பயிற்சி பாடநெறி, காலாட்படை கம்பனி தளபதி பாடநெறி, சமிக்ஞை இளம் அதிகாரிகள் பாடநெறி, அதிகாரி பார் எக்ஸலன்ஸ் பாடநெறி எண் 3 போன்ற பல உள்ளூர் பாடநெறிகளையும் பின்பற்றியுள்ளார்.

இன்று (6) அவர் புதிய நியமனத்தை பொறுப்பேற்க முன்னர் 5 வது இலங்கை சமிக்ஞைப் படையணி மற்றும் 1வது இலங்கை சமிக்ஞைப் படையணிகளின் கட்டளை அதிகாரி, இராணுவச் செயலகத்தில் பதவி நிலை அதிகாரி 1 (தரம் 1), சமிக்ஞை பாடசாலையின் கட்டளைத் தளபதி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளதுடன் 542 வது பிரிகேட் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் எல்லை இடர் மதிப்பீட்டு மையத்தின் (BRAC) பணிப்பாளர் மற்றும் இராணுவத் தலைமையகத்தில் முன்னோக்கு திட்டமிடல் மற்றும் அமுலாக்கப் பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட பல முக்கியமான பதவிகளையும் வகித்துள்ளார்.