Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2023 09:32:32 Hours

இராணுவ இசைக்குழு மற்றும் கலை நிகழ்ச்சி படையினருக்கு போர் இலக்கியம் தொடர்பில் அறிவு

புதன்கிழமை (நவம்பர் 22) புதன் பயிற்சி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இராணுவ இசைக்குழு மற்றும் கலை நிகழ்ச்சி பணிப்பகத்தில் ‘போர் இலக்கியம்’ குறித்த மதிப்புமிக்க கல்வி அமர்வில் அப் பணிப்பகத்தின் படையினர் பங்கேற்றனர்.

இவ் விரிவுரை நிகழ்வில் 280 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஊடக மற்றும் உளவியல் செயற்பாடுகள் பணிப்பகத்தின் லெப்டினன் கேணல் ஈஏஎஸ் சமிந்த அவர்கள் ஆற்றிய விரிவுரையை செவிமடுத்தனர்.

இறுதியில், லெப்டினன் கேணல் ஈஏஎஸ் சமிந்த அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி இராணுவ இசைக்குழு மற்றும் கலை நிகழ்ச்சி பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பீஆர்பிஏ பண்டார ஆர்எஸ்பீ அவர்களினால் விஷேட நினைவு சின்னம் ஒன்று வழங்கப்பட்டது.