Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th September 2019 16:45:19 Hours

இராணுவ ஆளனி நிருவாக பணியகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

இலங்கை இராணுவ ஆளனி நிருவாக பணியகத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் செனரத் நிவுன்ஹெல்ல அவர்கள் இம் மாதம் (12) ஆம் திகதி மஹாசங்க தேரரின் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது பதவியை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.

இவர் கஜபா படையணியைச் சேர்ந்த அதிகாரியாவார். இவரது பதவியேற்பின் பின்பு தனது பணிமனையிலுள்ள அதிகாரிகளுடன் குழுப் புகைப்படத்திலும் இணைந்து கொண்டார். இவர் இதற்கு முன்பு மாதுருஓயா இராணுவ பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதியாக கடமை வகித்து இடமாற்றம் நிமித்தம் ஆளனி நிர்வாக பணியகத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

முன்னாள் ஆளனி நிருவாக பணிப்பாளரான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்கள் புத்தள இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் கட்டளை தளபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers Store | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival