Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ ஆண்கள் மற்றும் மகளிர் சைக்கிளோட்ட வீரர்கள் விமானப்படையினரின் “பாபெதி சவாரிய’ சாம்பியன்ஷிப்பை வெற்றிகொண்டனர்

இலங்கை விமானப்படையின் 71 வது ஆண்டு நிறைவுடன் அண்மையில் இடம்பெற்ற ‘குவான் ஹமுதா பாபோி சவாரிய 2022’ போட்டியில் இலங்கை இராணுவ சைக்கிளோட்ட வீரர்கள் சாம்பியன்ஷிப்பை வென்றனர்.

இது தொடர்ச்சியாக 23 வது வருடமாக நடத்தப்பட்டதுடன் ஆண்களுக்கான போட்டி 2022 மார்ச் 4 முதல் 6 வரை மூன்று கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 412 கிலோமீட்டர் தூரம் கொண்ட இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து சைக்கிளோட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த கோப்ரல் அவிஷ்க மடோன்சா மூன்று கட்டங்களிலும் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சம்பியன்ஷிப்பை வென்றார். இதன்படி, அணி சம்பியன் பட்டத்தை இலங்கை இராணுவ சைக்கிளோட்ட அணி வென்றது.

ஞாயிற்றுக்கிழமை (6) புத்தளத்திலிருந்து கட்டுநாயக்க வரை 100 கிலோமீற்றர் தூரத்தை அடிப்படையாக கொண்டு இடம்பெற்ற பெண்களுக்கான போட்டியில், இலங்கை இராணுவ மகளிர் படையணியயை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஷாலிகா தில்ஹானி முதலாம் இடத்தையும் , லான்ஸ் கோப்ரல் மதுமாலி பெர்னாண்டோ மூன்றாவது இடத்தையும் சுவீகரித்துக் கொண்டனர். பெண்களுக்கான ஒட்டுமொத்த அணி சாம்பியன்ஷிப்பை இலங்கை இராணுவ சைக்கிளோட்ட அணி வென்றது.

கட்டுநாயக்க ஈகிள்ஸ் லகூன் வியூ பேங்க்வெட் மண்டபத்தில் இந்த பரிசளிப்பு விழா இடம்பெற்றதுடன் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன பிரதம அதிதியாக கலந்துகொண்டார். விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், விமானப்படையின் சைக்கிளோட்ட தலைவர் எயார் கொமடோர் கித்சிறி லீலாரத்ன மற்றும் அனைத்து அனுசரணையாளர்களின் பிரதிநிதிகளும் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.