Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2023 19:23:56 Hours

இராணுவ அதிகாரி ஒருவரினால் பேரூந்தில் நோய்வாய்ப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயாரின் உயிர் காப்பாற்றப்படல்

படையினரின் பன்முகத் திறன்கள் மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில், கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 24) புத்தளம் - ஆனமடுவ வீதியில் கொட்டுகச்சிய பகுதியில் இலங்கை பேரூந்தில் உயிருக்கு பேராடிய பயணி ஒருவரை இராணுவ அதிகாரி ஒருவர் காப்பாற்றி உள்ளார்.

குளியாபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காணித் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தரான இப்பெண் அன்று புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு குறித்த பேரூந்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதுடன் அவர் பயணம் செய்த அப் பேரூந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்துடன் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு முதலுதவி செய்வதற்கான போதிய அறிவு அந்த பயணிகள் எவருக்கும் இருக்கவில்லை.

புத்தளம் ஆட்சேர்பு பயிற்சிப் பாடசாலையில் பணிபுரியும் சூரக்குளத்தை வசிப்பிடமாகக் கொண்ட 4 வது இலங்கை காலாட் படையணியை சேர்ந்த மேஜர் ஆர்.எச்.எம். சுகத் ராஜகருணா பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்ததுடன், சுகயீனமடைந்த பெண்ணைக் கண்ட இராணுவ அதிகாரி, பேருந்தில் பயணித்த தனியார் வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் பயணி ஒருவரின் ஆதரவுடன், நோய்வாய்ப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக அடிப்படை முதலுதவி செய்து இது குறித்து ஆம்புலன்ஸ் சேவை 1990 அறிவித்தார்.

1990 அம்புலன்ஸ் சேவையைப் பெறத் தவறிய அவர், தனது நண்பரை தொலைபேசியில் அழைத்து, நோய்வாய்ப்பட்ட பெண்ணை தனது காரில் ஆனமடுவ வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்குத் தேவையான உதவியினை வழங்குமாறு பணித்தார். மேஜர் ஆர்.எச்.எம். சுகத் ராஜகருணா அவர்களின் இச் செயற்பாடு காரணமாக கட்டுபொட பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண், அதிகாரியின் நண்பரின் காரில் உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு வாரியபொல பிரதேசத்தில் பணிபுரிந்த அப் பெண்ணின் கணவன் வைத்தியசாலைக்கு வரும்வரை மேஜர் ஆர்.எச்.எம். சுகத் ராஜகருணா வைத்தியசாலை வளாகத்தில் தங்கியிருந்தார்.

முதலுதவி சிகிச்சை அளித்து சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாவிட்டால் உயிரிழக்கும் அல்லது உடல் நிரந்தரமாக செயலிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்தனர்.