Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th March 2022 20:27:34 Hours

இராணுவ அதிகாரிகளால் வீட்டுத்தோட்டம் தொடர்பில் மக்களுக்கு கற்பிப்பு

ராகம தேவாலய நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க, விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி – II மேஜர் ஏஎம் அரதுங்க, 6வது இலங்கை விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் இரண்டாம் நிலை கட்டளை அதிகாரி டபிள்யூடீயூ பெரேரா ஆகியோரினால் வியாழக்கிழமை (17) தேவாலய வளாகத்தில் 150 மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு வீட்டுத்தோட்டம் மற்றும் சேதன பசளை உற்பத்தி தொடர்பில் கற்பிக்கப்பட்டது.

இலங்கை இராணுவ கால்நடை மற்றும் விவசாய படையணின் தளபதியும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர மற்றும் இலங்கை இராணுவ கால்நடை மற்றும் விவசாய படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி அபேசேகர ஆகியோரும் மேற்படி அமர்வுகளில் பங்கேற்றனர்.

மேற்படி அமர்வின் போது வீட்டுத்தோட்டம் மற்றும் சேதன பசளை உற்பத்தின் நன்மைகள் தொடர்பிலும் அதன் முக்கியத்துவம் தொடர்பிலும் விரிவுரைகள் வழங்கப்படடதோடு, அமர்வின் நிறைவில் விரிவுரையில் பங்கேற்ற அனைவருக்கும் மா மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.