Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th December 2022 19:40:26 Hours

இராணுவப் போர்க் கல்லூரியில் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கட்டளைப் பாடநெறி நிறைவு

புத்தள இராணுவப் போர்க் கல்லூரியில் சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி - 06 மற்றும் கனிஷ்ட கட்டளைப் பாடநெறி - 25 தை நிறைவு செய்த 118 அதிகாரிகளுக்கு சனிக்கிழமை (03) இராணுவப் போர்க் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராணுவப் போர்க் கல்லூரியில் கட்டளைத் தளபதி பிரிகேடியர் மானட யஹம்பத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் போது, சிரேஷ்ட கட்டளைப் பாடநெறியில் 6 ல் 32 மாணவ அதிகாரிகள் மற்றும் கனிஷ்ட கட்டளைப் பாட நெறி இல 25 ல் 86 மாணவர் அதிகாரிகள், ஒரு வங்காளதேஸ் அதிகாரி மற்றும் இரண்டு பாகிஸ்தான் அதிகாரிகள் பாடநெறிச் சான்றிதழைப் பெற்றனர்.

பட்டமளிப்பு விழா முடிந்தவுடன் தளபதி ஒவ்வொரு பட்டதாரிகளுக்கும் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்வரும் அதிகாரிகள் ஒவ்வொரு பாடநெறியிலும் அதிக புள்ளிகளைப் பெற்றனர்;

சிரேஷ்ட கட்டளை பாடநெறி

தகுதி வரிசையில் முதலிடம் - மேஜர் எச்என்என்கே ஹெட்டியாராச்சி – இலங்கை இராணுவப் புலனாய்வுப் படையணி

தகுதி வரிசையில் இரண்டாம் இடம் - மேஜர் எம்கேடிபீபீ கங்கானீகே – இலங்கை இராணுவ சிங்கப் படையணி

தகுதி வரிசையில் மூன்றாம் இடம் - மேஜர் பி.எச்.என்.கே அரியரத்ன – கஜபா படையணி

கனிஷ்ட கட்டளை பாடநெறி

தகுதி வரிசையில் முதல் இடம் - மேஜர் டீடிஆர் தண்தநாராயண இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி

தகுதி வரிசையில் இரண்டாம் இடம் - மேஜர் ஈஎம்எச்ஆர் ஏக்கநாயக்க இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி

தகுதி வரிசையில் மூன்றாம் இடம் - மேஜர் ஏ.எம் ரணவக்க இலங்கை இராணுவ புலனாய்வுப் படையணி