Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th February 2023 18:34:23 Hours

இராணுவத்தினர் புதிய மாணவ தலைவர்களுக்கு 'தலைமைத்துவ பயிற்சி

கோனவளை சிறிபரகும் தர்ம வித்தியாலயத்தின் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை (12 பெப்ரவரி 2023) பாடசாலை வளாகத்தில் விசேட செயலமர்வின் போது, தலைமைத்துவப் பயிற்சி மற்றும் உடற் பயிற்சி மற்றும் நிபுணத்துத திறன்களை வெளிக்க கொண்டு வருவதற்கான செயலமர்வினை நடாத்தினர்.

புதிதாக நியமிக்கப்பட்ட பாடசாலை மாணவ தலைவர்களின் நலனுக்காக தலைமைத்துவ பண்புகள் மற்றும் உடற் பயிற்சி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த செயலமர்வை நடாத்துவதற்கு மேஜர் என்எம்ஜிகேசி நெத்திகுமார மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் ஆகியோர் தமது உதவிகளை வழங்கினர்.

புதிய 40 மாணவ தலைவர்கள் உடற் பயிற்சியில் கலந்துகொண்டனர், பின்னர் தலைமைத்துவ நுட்பங்கள், நடத்தை, பிரச்சினைகளை தீர்த்தல் போன்றவற்றில் விரிவான விரிவுரை அமர்வில் கலந்து கொண்டனர்.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோர் இந்த திட்டத்திற்கு தங்கள் ஆசிகளை வழங்கினர்.

இது 141 வது காலாட் பிரிகேட் தளபதியினால் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டதுடன், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், இந்நிகழ்விற்கு ஆதரவளித்தனர்.