Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th September 2023 07:13:23 Hours

இராணுவத்தினரால் யாழ்ப்பாண மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பரிசாக வழங்கல்

யாழ். பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51 வது காலாட் படைப்பிரிவின் 511 வது காலாட் பிரிகேட் படையினர் நன்கொடையாளர்களின் அனுசரணையுடன் புத்தூரில் அமைந்துள்ள மதிகைபஞ்சசீஹா ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் 48 மாணவர்களிடையே தலா 5000/= ரூபா பெறுமதியான பாடசாலை உதவிப் பொதிகளை செவ்வாய்க்கிழமை (செப். 19) பாடசாலை வளாகத்தில் வழங்கினர்.

அதேநேரம் பள்ளி நூலகத்திற்கு 300க்கும் மேற்பட்ட ஆங்கில புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன. அவுஸ்திரேலியாவிலுள்ள அமரபுர ஸ்ரீ தம்மராக்கித பிரிவின் பிரதம சங்கநாயக வண. பண்டித திகமடுல்லே விமலானந்த தேரர் தலைமையிலான சாக்கிய இளைஞர் குழுவின் அனுசரணையின் கீழ் இத்திட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை, 521 வது காலாட் பிரிகேடின் 11 வது விஜயபாகு காலாட் படையணி மாணவர்களுக்கான மற்றுமொரு நன்கொடை நிகழ்ச்சியை திங்கட்கிழமை (செப்.18) வல்வெட்டித்துறை கரவெட்டி ஸ்ரீ நாரத வித்தியாலயத்தில் அவுஸ்திரேலியாவில் உள்ள ஷக்யமுனி ஆலயத்தின் உதவியுடன் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வின் போது, 58 மாணவர்கள் பாடசாலை உபகரண பொதிகளை பெற்றுக்கொண்டனர்.

அதே நாளில், 523 வது காலாட் பிரிகேடின் 11 வது இலங்கை பொறியியல் படையணி படையினர் இதே நன்கொடை நிகழ்ச்சியின் மற்றொரு கட்டத்தை நாவட்குழி லக்தரு பாலர் பாடசாலையின் 28 பிள்ளைகளுக்கு ரூபா 5000/= பெறுமதியான பாடசாலை உபகரணங்களை ஆஸ்திரேலியாவில் உள்ள ஷக்யமுனி கோவிலின் அனுசரணையில் வழங்கினர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்கேஆர் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி எஸ்டப்ளியுபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி மற்றும் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹம்பத் ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஆகியோரின் வழிகாட்டுதல்களின்படி அனைத்து நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அந்தந்த பிரிகேட் தளபதிகள், புத்தள இராணுவப் போர்க் கல்லூரியின் இளநிலை பதவிநிலை அதிகாரிகளின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் கேணல் பிடிடீடி ஜயரத்ன பீஎஸ்சி, 511 வது காலாட் பிரிகேட் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் என்பிஏயுகே நிஸ்ஸங்க ஆர்எஸ்பீ மற்றும் அந்தந்த கட்டளை அதிகாரிகள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து தேவையான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டனர்.

வண. ஷாஸ்த்ரபதி பண்டித ஹக்மன சிரிசுமண தேரர், வண. ஷாஸ்த்ரபதி பண்டித கப்வேல வஜிர தேரர், யாழ். ஸ்ரீ நாக விகாரையின் தற்போதைய தேரர், வண. மீகஹஜதுரே சிறிவிமல தேரர், 52 வது காலாட் படைத்தளபதி, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்த நிகழ்ச்சிகளில் பங்குபற்றினர்