Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th September 2023 18:21:57 Hours

இராணுவத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட நடமாடும் மருத்துவ முகாம்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் மருத்துவ முகாமிற்கு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ ஆலோசனைகள், மருந்துகளைப் பெறுவதற்காக, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 13) கலந்து கொண்டனர்.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்களின் ஒழுங்கமைப்பு மற்றும் வழிகாட்டுதலுக்கமைய 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி இந்த திட்டத்தை நெருக்கமாக மேற்பார்வையிட்டார். 9 வது இலங்கை பீரங்கி படையினருக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க அப்பகுதியில் உள்ள ஏழை பொதுமக்களின் நலன்களுக்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில் ரூ.700,000/= பெறுமதியிலான மருந்துகள் வழங்கப்பட்டதுடன் இதற்கான அனுசரணையை 'அமைதிக்கான சர்வ மத கூட்டமைப்பு' வழங்கியது. மருத்துவ சோதனையில் கண் பரிசோதனை, செவிப்புலன் மற்றும் பேச்சு சோதனை, உடற்தினிவு சோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, சீரற்ற இரத்த சர்க்கரை பரிசோதனை, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவ கண்காட்சி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன.

இலங்கையின் மெதடிஸ்ட் தேவாலயத்தின் ஆயர் வண. எபினேசர் ஜோசப், தேசிய கிறிஸ்தவ சபையின் முன்னாள் செயலாளர் நாயகமும் 'சமாதானத்திற்கான சர்வ மத கூட்டணி' பொருளாளருமான திரு. ஹேமகுமார குணசேகர, மகளிர் பிரிவின் தலைவி திருமதி திலானி விதானகே. 'அமைதிக்கான சர்வ மதக் கூட்டமைப்பு' இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு உதவி வழங்கினர்.

233 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேட் தளபதி கேஎஸ்பீ பொத்துப்பிட்டி யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களால் இந்த திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த மருத்துவ ஆலோசனையில் 31 மருத்துவ நிபுணர்கள் தங்களின் பங்களிப்பை வழங்கினர்.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி 231 மற்றும் 233 வது காலாட் பிரிகேட் தளபதிகள், 9 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் பணி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.